வணிகம்

சந்திரசேகரனுக்கு 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு: டாடா சன்ஸ் வாரியம் ஒப்புதல்

செய்திப்பிரிவு

மும்பை: இந்​தி​யா​வின் முன்​னணி மற்​றும் மிகப்​பெரிய தொழில் குழு​ம​மான டாடா குழு​மத்​தின் தாய் நிறுவனம் டாடா சன்ஸ். இந்நிறு​வனத்​தின் தலை​வ​ராக தமிழகத்​தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் 2017-ல் பொறுப்​பேற்​றார். அவருடைய தற்போதைய பதவிக்​காலம் 2027 பிப்​ர​வரி 20-ம் தேதி​யுடன் முடிவடைய உள்​ளது.

எனவே சந்​திரசேகரனின் பதவிக் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்​டிக்க கடந்த பிப்​ர​வரி மாதம் 24-ம் தேதி நடை​பெற்ற டாடா சன்ஸ் வாரியக் குழு​வின் கூட்​டத்​தில் தீர்​மானம் முன்​வைக்​கப்​பட்​டது.

ஆனால், ரத்​தன் டாடா​வின் சகோ​தரர் நோயல் டாடா தீர்மானத்துக்கு எதி​ராக வாக்​களித்​ததால் தீர்​மானம் நிறைவேற்றப்​பட​வில்​லை. டாடா சன்ஸ் வாரியக் குழு புதிய தலைவரை தேர்வு செய்​வதற்​கான பணி​களை தொடங்​கியது. இந்​நிலை​யில், மும்​பை​யில் நேற்று நடை​பெற்ற டாடா சன்ஸ் வாரியக் குழுக் கூட்​டத்​தில், அதன் தலை​வ​ராக சந்​திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்​டு​களுக்கு பதவி நீட்​டிப்பு வழங்க ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது.

நோயல் டாடா எதிர்ப்பு

இது தொடர்​பாக அறக்​கட்​டளை வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “ஒரு தலை​வரின் நியமனத்​துக்​கு, அறக்​கட்​டளை​யின் நியமன இயக்​குநர்​களில் பெரும்​பான்​மை​யானோர் ஆதர​வாக வாக்​களிக்க வேண்​டும் என டாடா சன்ஸ் நிறு​வனத்​தின் விதி​கள் கூறுகின்​றன.

இந்த நிபந்​தனை முதல் நியமனத்​துக்​கும், மறுநியமனத்​துக்​கும் பொருந்​தும். அறக்​கட்​டளை​யின் நியமன இயக்​குநர்​களில் ஒரு​வ​ரான நோயல் டாடா, பதவி நீட்​டிப்பு தீர்​மானத்​துக்கு எதி​ராக வாக்​களித்​த​தால், அந்த நியமனம் சட்டப்படி செல்லாது” என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT