வணிகம்

ஏர் இந்தியாவை கைப்பற்றிய பிறகு முதல் ட்ரீம்​லைனர் விமானம் வாங்கியது டாடா குழுமம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்​திய அரசுக்கு சொந்​த​மான ஏர் இந்​தியா நிறு​வனத்தை 4 ஆண்​டு​களுக்கு முன்பு டாடா குழுமம் வாங்கியது. அதன்​ பிறகு, விமான சேவையை ஒழுங்குபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை டாடா குழுமம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், முதல் முறை​யாக போ​யிங் 787-9 விமானத்தை வாங்​கி​யுள்ளது. இது அந்த நிறு​வனத்​துக்​காக பிரத்​யேக​மாக தயாரிக்​கப்​பட்ட முதல் ட்ரீம்லைனர் விமானம் ஆகும். அமெரிக்காவின் சியாட்​டில் நகரில் உள்ள போ​யிங்​நிறுவனத்தின் எவரெட் ஆலை​யில், இந்த ட்ரீம்​லைனர் விமானத்தின் உரிமை மாற்​றம் தொடர்பான நடவடிக்கையை ஏர் இந்தியா நிறைவு செய்​தது.

சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகத்​தின் (டிஜிசிஏ) ஆய்​வு​களுக்​குப் பிறகு, இந்த விமானம் அடுத்த சில நாட்​களில் இந்​தி​யா​வுக்கு கொண்டு வரப்​படும். இந்த புதிய விமானம் எகானமி, பிரீமி​யம் மற்​றும் பிசினஸ் என 3 வகுப்பு இருக்கை அமைப்​பு​களை கொண்​டது.

SCROLL FOR NEXT