வணிகம்

3-வது காலாண்​டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி​ லாபம் ரூ.342 கோடி!

2025-2026-ம் நிதி​யாண்​டு

ரெ.ஜாய்சன்

தூத்​துக்​குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி​ 2025-2026-ம் நிதி​யாண்​டின் 3-வது காலாண்​டில் ரூ.342 கோடி லாபம் ஈட்டி​யுள்​ளது. தூத்​துக்​குடியை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் தமிழ்​நாடு மெர்க்​கன்​டைல் வங்​கி​யின் இயக்​குநர் குழு கூட்​டம் தூத்​துக்​குடி​யில் நடைபெற்றது.

இதில் 2025- 2026-ம் நிதி​யாண்​டின் மூன்​றாம் காலாண்டுக்கான நிதி​நிலை அறிக்​கையை வங்​கி​யின் நிர்​வாக இயக்​குநர் மற்​றும் தலைமைச் செயல் அதிகாரியான சலீ எஸ்​.​நாயர் வெளி​யிட்​டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 2025- 2026-ம் நிதி​யாண்​டின் 3-ம் காலாண்​டில் வங்​கி​யின் மொத்த வணி​கம் 14.28% வளர்ச்சியடைந்து ரூ.1 லட்​சத்து 7 ஆயிரத்து 470 கோடியை எட்​டி​யுள்ளது.

          

வைப்​புத் தொகை ரூ.56,707 கோடி​யாகி உள்​ளது. மொத்த கடன் தொகை ரூ.50,763 கோடி​யாக உள்​ளது. இது 16.30% வளர்ச்​சி​யாகும். மொத்த வாராக்​கடன் 1.32 சதவீதத்​தில் இருந்து 0.91 சதவீத​மாக​வும், நிகர வாராக்​கடன் 0.41 சதவீதத்​தில் இருந்து 0.20 சதவீத​மாக​வும் குறைந்​துள்​ளது. வங்கி பங்​கு​களின் புத்தக மதிப்பு ரூ.550.38-ல் இருந்து ரூ.617.22 ஆக அதி​கரித்​துள்​ளது.

இந்த காலாண்​டில் வங்​கி​யின் சில்​லரை, விவ​சா​யம், சிறு, குறு நடுத்தர நிறு​வனங்​களின் கடன் தொகை 92.39 சதவீதத்​தில் இருந்து 93.98 சதவீத​மாக உயர்ந்துள்​ளது. 2025- 2026-ம் நிதி​யாண்டு 3-ம் காலாண்​டில் 12 புதிய கிளை​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. வங்கி செயல்​திறனை அதிகரிக்கவும், சேவை​களை விரிவுபடுத்​த​வும் பல விரைவான முயற்​சிகளை​யும், தொழில்​நுட்​பம் சார்ந்த நடவடிக்​கைகளை​யும் வங்கி மேற்​கொண்டு வரு​கிறது. இணை​ய​வழி இ.பி.எப். செலுத்​தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்​ளது. இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT