வணிகம்

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 1,248 புள்ளிகள் சரிவு

செய்திப்பிரிவு

மும்பை: ​சாதகமற்ற சர்​வ​தேச நில​வரங்​களால் இந்​திய பங்​குச் சந்​தைகளில் நேற்​றைய வர்த்​தகம் கடும் சரிவைச் சந்​தித்​தது.

அமெரிக்கா - ஈரான் இடையி​லான போர் பதற்​றம், சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்​ணெய் விலை மீண்டும் 100 டாலராக உயர்​வு, அமெரிக்​கப் பத்​திரங்​களின் வட்டி விகிதம் அதி​கரிப்பு மற்​றும் சர்​வ​தேச சந்​தை​யின் நிச்​சயமற்ற தன்மை காரண​மாக இந்​திய பங்​குச் சந்​தைகள் நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

நேற்​றைய வர்த்தக நேர முடி​வில் மும்பை பங்​குச் சந்தை குறி​யீட்டு எண் சென்​செக்ஸ் 1,248 புள்​ளி​கள் வீழ்ச்சி கண்டு 73,580 புள்​ளி​களாக​வும், தேசிய பங்​குச் சந்தை குறி​யீட்டு எண் நிஃப்டி 384 புள்​ளி​கள் குறைந்து 23,063 புள்​ளி​களாக​வும் நிலைத்​தன.

மிட்​கேப் மற்​றும் நிதித்​துறை நிறுவன பங்​கு​களில் அதி​கள​வில் விற்​பனை அழுத்​தம் காணப்​பட்​டது. சென்​செக்ஸ் பட்​டியலில் உள்ள முன்​னணி நிறு​வனங்​களில் பஜாஜ் பைனான்ஸ் சுமார் 5.5% வரை சரிவைச் சந்​தித்​தது. ஆக்​சிஸ் வங்கி (4.7%), பஜாஜ் பின்​சர்வ் (4% மேல்) ஆகிய நிறு​வனங்​களும் அதிக சரிவைப் பதிவு செய்​தன. அதேவேளை​யில், என்​டிபிசி பங்கு மாற்​றம் ஏது​மின்றி நிலைபெற்​றது.

SCROLL FOR NEXT