வணிகம்

எப் அண்ட் ஓ வர்த்தகத்தை கட்டுப்படுத்த பங்கு பரிவர்த்தனை வரி உயர்வு: நிர்மலா சீதாராமன் விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பட்​ஜெட்​டில் பங்கு பரிவர்த்தனையில் ஃபியூச்சர்ஸ் வர்த்​தகத்​துக்​கான வரி 0.02%-லிருந்து 0.05 %-ஆக​வும், ஆப்​ஷன்ஸ் வரி 0.10%-லிருந்து 0.15%-ஆக​வும் உயர்த்​தப்​பட்​டது.

இந்த நிலை​யில், என்​டிடிவி ப்ராபிட் மாநாட்​டில் கலந்து கொண்ட நிதி​யமைச்​சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து பேசி​ய​தாவது: ”ஊக வணி​கத்தை கட்​டுப்​படுத்​து​வதற்​கான ஒரு கசப்பு மருந்​தாகவே பட்​ஜெட்​டில் எஸ்​டிடி வரி உயர்த்​தப்​பட்​டது. முறை​கேடு​களை தடுப்​பதே இதன் முக்​கிய நோக்​கம். அடிக்​கடி வர்த்​தகம் செய்​யும் ஊக வணி​கர்​களை இந்த வரி உயர்வு நேரடி​யாகப் பாதிக்​கும்.

          

உண்​மை​யான முதலீட்​டாளர்​களைப் பாதிக்​காமல் சந்​தை​யின் அதீத வேகத்​தைக் குறைக்க வேண்​டும். வரு​வாய் மற்​றும் வளர்ச்சி​யைத் தாண்டி உலக அரசி​யல் நகர்​வு​களை​யும் கவனிக்க வேண்​டிய அவசி​யம் ஏற்​பட்​டுள்​ளது. தற்​போதைய நிலை​யில், மூலதன செல​வின நடவடிக்​கைகளை கண்​காணிப்​பதுடன் நாட்டின் வளர்ச்​சிக்கு ஒழுக்​க​மான நிதி நிர்​வாக​மும் அத்தியாவசிய​மான​தாகும். இவ்​வாறு அவர் கூறினார்​.

SCROLL FOR NEXT