வணிகம்

மார்ச் 1 முதல் யுடிஎஸ் செயலி நிறுத்தம் - ‘ரயில் ஒன்’ செயலிக்கு மாற ரயில்வே வேண்டுகோள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​மார்ச் 1 முதல் யுடிஎஸ் (UTS) மொபைல் செயலி நிறுத்தப்​படு​வ​தால் ரயில்​ஒன் (RailOne) செயலிக்கு மாறு​மாறு பயணி​களுக்கு ரயில்வே வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே கூறி​யிருப்​ப​தாவது: "யுடிஎஸ் மொபைல் செயலியை மார்ச் 1 முதல் பயன்​படுத்த முடி​யாது. இதற்கு பதிலாக ரயில்​ ஒன் செயலியை பதி​விறக்​கம் செய்து பயன்​படுத்த பயணி​கள் அறி​வுறுத்​தப் ​படு​கின்​றனர். யுடிஎஸ் செயலி பயனர்​களின் தற்​போதைய ஆர்​-​வாலட் இருப்பு முற்​றி​லும் பாது​காப்​பாக இருக்​கும். அது காலா​வ​தி​யா​காது. அந்த இருப்பு ரயில்​ ஒன் செயலி​யில் பயன்​படுத்த கிடைக்​கும்.

முன்​ப​திவு டிக்​கெட், முன்​ப​திவு அல்​லாத டிக்​கெட், சீசன் மற்​றும் நடைமேடை டிக்​கெட் சேவை​களை ரயில்​ஒன் செயலி வழங்​கும். இந்த செயலி மூலம் பிஎன்​ஆர் நில​வரம் அறிய​லாம். முன்​ப​திவு ரத்து செய்​ய​லாம். ரீபண்ட் நில​வரம் உட்பட அனைத்து விவரங்களையும் அறிய​லாம். இவ்வாறு தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

          
SCROLL FOR NEXT