வணிகம்

நடப்பு 2026-27 முதல் காலாண்டில் ரூ.82,000 கோடிக்கு இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பு 2026-27-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் (ஏப்​ரல் - ஜூன்) இந்தியா​வின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4% அதிகரித்து, சுமார் ரூ.82,000 கோடியைத் தாண்டி உள்ளது. கடந்த நிதி​யாண்​டின் இதே கால​கட்​டத்​தில் இது ரூ.76 ஆயிரம் கோடியாக இருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

இந்​தி​யத் தயாரிப்பு​களுக்கு அமெரிக்​கச் சந்​தை​யில் நில​வும் வலுவான தேவை​யின் காரண​மாக, இந்​திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி​யின் மிகப்​பெரிய சந்​தை​யாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்​தில் நீடிக்​கிறது. இந்த அபார வளர்ச்​சி​யால் நாட்​டின் ஒட்டுமொத்த மின்​னணு சாதனங்​களின் ஏற்​றும​தி​யும் ஏற்​றம் கண்டுள்​ளது.

அதன்​படி, ஏப்​ரல் - ஜூன் கால​கட்​டத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட ரூ.1.45 லட்சம் கோடி மின்​னணு சாதன ஏற்​றும​தி​யில், ஸ்மார்ட்போன்களின் பங்​களிப்பு மட்​டும் 64.8 சதவீத​மாக உள்​ளது. இந்தியா​வில் தயாரிக்​கப்​பட்ட போன்​களில் 3-ல் ஒரு பங்கு ஏற்றுமதி செய்​யப்​பட்​டுள்​ளது.

மத்​திய அரசின் ஊக்​கத்​தொகை திட்​டம் (பிஎல்​ஐ), சிறப்பு பொருளா​தார மண்​டலச் சீர்​திருத்​தங்​கள், கூடு​தல் பட்​ஜெட் ஒதுக்கீடு, அந்​நிய நேரடி முதலீட்​டுத் தளர்​வு​கள் ஆகியவை இந்த வேக​மான வளர்ச்​சிக்​கு முக்​கியக்​ காரண​ங்களாக அமைந்துள்ளன.

SCROLL FOR NEXT