வணிகம்

செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கவரி வசூல் அடுத்தாண்டு அமல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்க வரி வசூல் முறை அடுத்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனவும், இதன் மூலம் வாகன ஓட்டிகளின் காத்திருப்பு நேரம் குறையும் எனவும் மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அளித்த பதிலில் கூறியதாவது:

சுங்க வரி வசூல் முறையில் அறிமுகம் செய்யப்படும் புதிய தொழில்நுட்பம் செயற்கைக்கோள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இருக்கும். அரசுக்கும் ரூ.6,000 கோடி வருவாய் கிடைக்கும். சுங்கச்சாவடியில் அமைக்கப்படும் தடையின்றி செல்லும் வழி (எம்எல்எப்எப்) மிகச் சிறந்த வசதி.

ஃபாஸ்ட்டேக்குக்கு மாற்றாக எம்எல்எப்எப் முறை வந்தபின், வாகனங்கள் நிற்காமல் சுங்கச்சாவடியை அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் கடந்து செல்ல முடியும். யாரும் இடைமறிக்க மாட்டார்கள். அடுத்தாண்டு இறுதிக்குள் இந்தப் பணியை நாங்கள் நிறைவு செய்வோம். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

SCROLL FOR NEXT