வணிகம்

95 ஆக்​டேன் தரத்​தில் நாடு முழுவதும் ஏப்.1 முதல் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை கட்டாயம்

அமல்​படுத்த மத்​திய அரசு உத்​தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழு​வதும் ஏப்​ரல் 1-ம் தேதி முதல், 20 சதவீத எத்தனால் கலந்த ‘இ20’ ரக பெட்​ரோலைக் குறைந்தபட்​சம் 95 ஆக்​டேன் தரத்​தில் மட்​டுமே விற்​பனை செய்ய வேண்​டும் என்​பதை மத்​திய அரசு கட்டாயமாக்கியுள்​ளது.

இதுதொடர்​பாக மத்​திய பெட்​ரோலி​யத் துறை அமைச்சகம் நேற்று வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: வாக​னங்​களின் இன்​ஜின் பாது​காப்பை உறுதி செய்​வதற்​காக 95 ஆக்டேன் தரத்தில் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை கட்டாயமாக்கும் முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது.

          

ஆக்​டேன் என்​பது பெட்​ரோல் அதிக அழுத்​தத்​தி​லும் சீராக எரிவதைக் குறிக்​கும் அளவீ​டாகும். பெட்​ரோலில் எத்தனால் கலக்​கும் போது, இன்​ஜினுக்​குள் எரிபொருள் சீரற்ற முறை​யில் எரிந்து தேவையற்ற சத்​தத்​தை​யும், அதிர்​வை​யும் ஏற்​படுத்த வாய்ப்​புள்​ளது. 95 ஆக்​டேன் தரம் என்​பது இந்​தச் சிக்​கலைத் தடுத்து இன்​ஜினைப் பாதுகாக்கும்.

எத்​த​னால் இயற்​கை​யிலேயே அதிக ஆக்​டேன் (சு​மார் 108) கொண்​டது. எனவே, எத்​த​னால் கலப்​பால் பெட்​ரோல் இன்ஜினின் வேகம் மற்​றும் ஆயுள்​காலம் அதி​கரிக்​கும் என நிபுணர்​கள் தெரி​வித்துள்ளனர்.

நாட்​டின் பொருளா​தா​ரத்தை மேம்​படுத்​தும் நோக்​கில் அறிமுகப்​படுத்​தப்​பட்ட எத்​த​னால் கலப்பு பெட்​ரோல் மூலம், கடந்த 10 ஆண்​டு​களில் சுமார் ரூ. 1.40 லட்​சம் கோடி அந்​நியச் செலா​வணி சேமிக்​கப்​பட்​டுள்​ளது. கச்சா எண்ணெய் இறக்​கும​தி​யும் குறைந்​துள்​ளது. கரும்​பு, சோளம் மற்​றும் தானி​யங்​களில் இருந்து எத்​த​னால் தயாரிக்​கப்​படு​வ​தால், விவ​சா​யிகளுக்கு கூடு​தல் வருவாய் கிடைக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

தற்​போது நாட்​டின் பெரும்​பாலான பெட்​ரோல் நிலையங்களில் ‘இ20’ அல்​லது 20% எத்​த​னால் கலந்த பெட்ரோல் விற்​பனை செய்​யப்​பட்டு வரு​கிறது. நாடு முழுவதும் ஏப்​ரல் 1 முதல் இந்த வகை பெட்​ரோலை விற்பனை செய்​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT