வணிகம்

ரஷ்யா, ஈரானிடம் ஒரு மாதம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு வழங்கிய அனுமதி புதுப்பிக்கப்படாது: அமெரிக்கா

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ரஷ்யா மற்​றும் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்​தி​யா​வுக்கு அளிக்​கப்​பட்ட 1 மாத அனுமதி புதுப்பிக்​கப்​ப​டாது என அமெரிக்கா கூறி​யுள்​ளது. ஹார்முஸ் ஜலசந்​தியை ஈரான் கடந்த மார்ச் மாதம் மூடியதை அடுத்து எரிபொருளுக்கு உலகம் முழு​வதும் தட்டுப்பாடு ஏற்​பட்டு சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்​தது.

இதையடுத்து ஈரான் மற்​றும் ரஷ்​யா​விடம் இருந்து எரிபொருள் வாங்க விதிக்​கப்​பட்​ட தடைக்கு ஒரு மாத காலம் அமெரிக்கா விலக்கு அளித்​தது. இதைப் பயன்​படுத்தி ரஷ்​யா​வின் ராஸ்​நெப்ட், லுக்​ஆ​யில் ஆகிய நிறு​வனங்​களிடம் இருந்து 30 மில்​லியன் பேரல் கச்சா எண்​ணெய் வாங்க ரிலை​யன்ஸ் உட்பட இந்​திய சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள் பல ஆர்​டர் கொடுத்​தன. இந்த விலக்கு ஏப்ரல் 11-ம் தேதி​யுடன் முடிந்​தது.

இதே​போல் ஈரானிடம் கச்சா எண்​ணெய் வாங்க விதிக்கப்பட்ட தடைக்கு கடந்த மார்ச் 20-ம் தேதி தளர்வு அறிவிக்​கப்​பட்​டது. இதன் மூலம் 140 மில்​லியன் பேரல் கச்சா எண்​ணெய் சர்​வ​தேச சந்​தையை சென்​றடைந்து தட்டுப்​பாட்​டை​யும், விலை உயர்​வை​யும் குறைக்​கும் என எதிர்பார்க்கப்​பட்​டது. இந்த தளர்வு வரும் 19-ம் தேதி​யுடன் முடிகிறது.

தற்​போது ஹார்​முஸ் ஜலசந்​தியை அமெரிக்கா முற்றுகையிட்டு ஈரானுக்கு அழுத்​தம் கொடுத்து வருகிறது. இதனால் இங்கு விரை​வில் கப்​பல் போக்குவரத்து தொடங்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதையடுத்து ரஷ்யா மற்​றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதற்கு அளிக்​கப்​பட்ட தடை விலக்கு புதுப்​பிக்​கப்​ப​டாது என அமெரிக்க நிதி​யமைச்​சர் ஸ்காட் பெசன்ட் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அமெரிக்​கா​வின் ஜனநாயக கட்சி செட் உறுப்​பினர் ரிச்​சர்ட் ப்ளு​பென்​தால் கூறுகை​யில், “ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்க அளிக்​கப்​பட்ட தடை விலக்கு நீட்டிக்​கப்​ப​டாது. இந்த விலக்​கால் ரஷ்​யா​வுக்கு நாள் ஒன்றுக்கு 150 பில்​லியன் டாலர் வரு​வாய் கிடைத்​தது. இந்த நிதியை உக்​ரைன் மக்​களை கொல்​ல​ ரஷ்​யா பயன்படுத்தும்​” என்​றார்.

SCROLL FOR NEXT