வணிகம்

யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும்

புதிய விதி கொண்டுவர ரிசர்வ் வங்கி திட்டம்

செய்திப்பிரிவு

மும்பை: கடந்த ஆண்​டில் டிஜிட்​டல் மோசடி மூலம் மக்​கள் ரூ.22,900 கோடி அளவுக்கு பணத்தை இழந்​துள்​ளனர். இதுதொடர்​பாக 28 லட்​சம் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

யுபிஐ மற்​றும் ஐஎம்​பிஎஸ் போன்ற அமைப்​பு​கள் உடனடி பணப்​பரி​மாற்​றத்​தைச் செய்​வ​தால், பாதிக்​கப்​படு​பவர்​களால் ஒன்​றும் செய்ய முடி​யாத நிலை ஏற்​படு​கிறது. இதைத் தடுப்​ப​தற்​காக ரிசர்வ் வங்கி புதிய விதி​முறையை அறி​முகம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ளது. இதன்​படி, ஒரு​வர் யுபிஐ மூலம் மற்றொருவருக்கு ரூ.10,000-க்கு மேல் அனுப்​பி​னால், அது உடனே செல்​லாது. ஒரு மணி நேரத்​துக்கு பின்பே செல்​லும். இந்த இடைப்​பட்ட நேரத்​தில், நாம் பணத்​தைத் தவறான நபருக்கு அனுப்​பி​விட்​டோம் அல்​லது மோசடி செய்​யப்​பட்​டுள்​ளோம் என்​பதை அறிந்​தால், நாம் அனுப்பிய பணத்தை ரத்து செய்​யும் வசதி கொண்டு வரப்​படும்.

          

ஆனால், ரூ.10,000-க்​கும் கீழ் உள்ள பணப்​பரி​மாற்​றத்​துக்கு இந்த புதிய விதி பொருந்​தாது. இந்த புதிய விதி​முறை​கள் தொடர்​பாக பொது மக்​கள் மற்​றும் வங்​கித் துறை சார்ந்த நிபுணர்​கள் மே 8-ம் தேதி வரை ஆலோ​சனை​ தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்​ளது.

SCROLL FOR NEXT