சென்னை: நாட்டின் முன்னணி மனிதவள மற்றும் பணியாளர் தீர்வுகளை வழங்கி வரும் சிஐஇஎல் ஹெச்ஆர் நிறுவனம், 2026ம் நிதியாண்டில் மொத்த வருவாயாக ரூ.1,984.6 கோடியை ஈட்டியுள்ளது. இதன் மூலம், அந்நிறுவனம் 32 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் க.பாண்டிய ராஜன் கூறியதாவது: பத்தாண்டுக்குள் ரூ. 1,000 கோடி மதிப்பிலான மனிதவள நிறுவனமாக உயர வேண்டும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட சிஐஇஎல், தற்போது தொழில் நுட்பம், ஏஐ உதவியுடன் அந்த மைல்கல்லை 9 ஆண்டுகளிலேயே எட்டிப் பிடித்துள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2030-ம் ஆண்டுக்கான தொலை நோக்குத் திட்டத்தின் மூலம், வரும் 2030-ம் ஆண்டுக்குள் ரூ. 6,000 கோடி வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போது நிறுவனங்கள் ஒருங்கிணைந்த பணியாளர் மேலாண்மை முறையை நாடுகின்றன.
மாறிவரும் தொழில் சூழலுக்கு ஏற்ப நிறுவனங்களுக்குத் தேவையான திறன் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் முதன்மைப் பங்காளியாக சிஐஇஎல் உருவெடுத்துள்ளது. இவ்வாறு பாண்டிய ராஜன் கூறினார்.