மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

 
வணிகம்

சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் ரூ.1,078 கோடி லாபம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஹைதராபாத் வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அகமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரயில் போக்குவரத்துக்கான பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த ரயில் மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும். தற்போது சூரத்-பிலிமெரா இடையே 50 கி.மீ. தூரத்துக்கான புல்லட் ரயில்வே பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

இதே வேகத்தில் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெறும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் புல்லட் ரயிலுக்கான பெட்டிகள் தயாராகி விடும். அதன் பின்னர் வெள்ளோட்டம் நடத்தப்படும். வரும் 2029-ல் தானே வரை புல்லட் ரயில் பாதை போக்குவரத்து இருக்கும்.

சரக்கு ரயில் போக்குவரத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தோம். அதனால், இந்த ஆண்டு இதுவரை கூடுதலாக ரூ.1,078 கோடி லாபம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை நம் நாட்டில் 800 கோடி பேர் ரயிலில் பயணம் செய்துள்ளனர். 1980-ம் ஆண்டு கால கட்டத்தில் இருந்த டிக்கெட் முறையை முழுவதாக நீக்கி விட்டோம்.

ஹைதராபாத்தில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் அது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT