மும்பை: டிஜிட்டல் வங்கிப் பரிவர்த்தனைகளில் அதிகரித்து வரும் மோசடி களைத் தடுக்க புதிய வரைவு வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது.
இதன்படி தனது வங்கிக் கணக்கு விவரங்கள் கசிந்துவிட்டதாகவோ, மோசடி நடக்க வாய்ப்புள்ளதாகவோ வாடிக்கையாளர் சந்தேகித்தால், 'ஸ்டாப் ஸ்விட்ச்' மூலம் வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பண வெளியேற்றங்களை உடனடியாக நிறுத்த முடியும். கிளைகள், ஏடிஎம், நெட்பேங்கிங், மொபைல் செயலி மற்றும் ஐவிஆர் ஆகியவற்றின் மூலம் இதை இயக்கலாம். இதன் மூலம், புதிய பணப் பரிவர்த்தனைகள், புதிய ஆட்டோ-டெபிட்/பேமண்ட்கள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் புதிய யுபிஐ பதிவுகள் தடுக்கப்படும். ஆனால், இது கணக்கை முழுமையாக முடக்காது.
பரிவர்த்தனை முயற்சி நடக்கும்போது சம்பந்தப்பட்ட நபருக்குத் தகவல் அனுப்பப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குள் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு தெரிவிக்கப்பட வேண்டும்; இல்லையெனில் பரிமாற்றம் தானாக ரத்து செய்யப்படும். இந்த வரைவு விதிகள் மீது டிசம்பர் 14, 2026 வரை கருத்துகள் கோரப்பட்டுள்ளன. வங்கிகளின் அலட்சியம் தொடர்பான விதிகள் ஜனவரி 1, 2027 முதல் அமலுக்கு வரவும், 'ஸ்டாப் ஸ்விட்ச்' மற்றும் 'நம்பிக்கைக்குரிய நபர்' வசதிகள் ஜூலை 1, 2027 முதல் நடைமுறைக்கு வரவும் (அல்லது அதற்கு முன்பே வங்கிகள் செயல்படுத்தவும்) முன்மொழியப்பட்டுள்ளன.