எலான் மஸ்க் மற்றும் ராகுல் காந்தி
புதுடெல்லி: ‘இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறோம்’ என்று ஸ்டார்லிங்க் விவகாரத்தில் தொழிலதிபர் எலான் மஸ்குக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளர், உலகின் ட்ரில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர் என அறியப்படுகிறார் எலான் மஸ்க். இத்தகைய சூழலில் வியாழக்கிழமை (அக்.8) அன்று அவரது எக்ஸ் தள பதிவு இந்தியாவில் அதிகம் கவனம் பெற்றது.
“ஸ்டார்லிங்க் நிறுவனம் சுமார் 165 நாடுகளில் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இந்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஐந்து ஆண்டுகள் செயல்பட்ட நிலையில், இன்னும் உரிமம் கிடைக்கப்பெறாதது ஏன்? அம்பானி தான் இந்தியாவின் அசல் எஜமானா (பாஸ்)” என்று மஸ்க் ட்வீட் செய்திருந்தார். இது இந்தியாவில் பேசு பொருளாகி உள்ளது. அவரது ட்வீட்டுக்கு பலரும் பதில் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் தனது பதிலை பதிவிட்டார். “இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறோம் எலான். மற்றொரு நபரை அறியும் வரை நீங்கள் காத்திருங்கள்” என்று குறிப்பிட்டார்.
அதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், “தேங்க் யூ ராகுல். உண்மையில் இது கவலைக்குரியது” என்று தெரிவித்தார்.
ஸ்டார்லிங்க்
அமெரிக்க நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் புராஜக்ட் வழியே 165 நாடுகளில் சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது. அதற்கான அங்கீகாரத்தையும் ஸ்பேஸ்-எக்ஸ் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த சேவையை விரிவு செய்வதே அந்நிறுவனத்தின் நோக்கம். தற்போது ஸ்பேஸ்-எக்ஸின் துணை நிறுவனமாக ஸ்டார்லிங்க் இயங்கி வருகிறது.
அந்த வகையில் இதன் சேவை இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால் டவர் (செல்போன் சிக்னல் கோபுரங்கள்) சார்ந்த நெட்வொர்க் சிக்கல்களை பயனர்கள் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
கடந்த 2022 முதல் இந்தியாவில் தங்களது வணிக ரீதியான சேவையை வழங்குவதற்கான உரிமத்தை பெற ஸ்டார்லிங்க் நிறுவனம் முயன்று வருவதாக தகவல். கடந்த 2025 ஜூனில் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடமிருந்து முக்கிய உரிமத்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் தனது ட்வீட் மூலம் மஸ்க் இப்போது மறுத்துள்ளார்.