புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனமான நயாரா, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலையை ரூ.3-ம் உயர்த்தி உள்ளது.
இந்த விலை உயர்வு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நயாராவின் 7,000-க்கும் மேற்பட்ட பங்க்குகளில் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் நயாரா நிறுவனம் இந்த ஆண்டில் 2-வது முறையாக எரிபொருள் விலையை உயர்த்தி உள்ளது.
முன்னதாக மார்ச் மாதத்தில் விலையை உயர்த்தியது. எனினும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான 1,04,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.