வணிகம்

சுதேசி தயாரிப்​பு​களை ஊக்குவித்த பிரதமர் மோடிக்கு பார்லே நிறுவனம் நன்​றி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இத்​தாலி பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்​லெட் பரிசளித்த பிரதமர் மோடி உள்​நாட்​டுத் தயாரிப்​பு (சுதேசி) பொருள்​களைப் பயன்​படுத்​து​வதை ஊக்​குவிக்​கும் வகை​யில் பேசி​யிருந்​தார்.

இதற்​கு, இந்​தி​யா​வின் முன்​னணி பிஸ்​கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே தனது மனமார்ந்த நன்​றியைத் தெரிவித்துள்​ளது. பிரதமரின் இந்த பேச்சு தங்​களுக்​குப் பெரும் இன்ப அதிர்ச்​சி​யாக அமைந்​தது என்று அந்​நிறு​வனம் குறிப்பிட்டுள்​ளது.

சமீபத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்​திய மக்​கள் அனை​வரும் உள்​நாட்​டுத் தயாரிப்​பு​களை ஆதரிக்க வேண்​டும் என்​றும், அதுவே நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சியை வலுப்​படுத்​தும் என்​றும் வலியுறுத்தியிருந்​தார். அப்​போது, இந்​தி​யர்​களின் உணர்​வோடு கலந்த உள்​நாட்டு பிராண்​டு​களுக்கு உதா​ரண​மாக பார்லே நிறுவனத்​தைக் குறிப்​பிட்டு பேசி​னார்.

இது குறித்து பார்லே நிறு​வனத்​தின் துணைத் தலை​வர் மயங் பிரவீன் ​சந்​திர ஷா வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: மதிப்​பிற்​குரிய பிரதமர் நரேந்​திர மோடி அவர்​கள், சுதேசி தயாரிப்​பு​களின் முக்​கி​யத்​து​வம் குறித்​துப் பேசும் போது எங்​கள் நிறு​வனத்​தின் பெயரைக் குறிப்​பிட்​டது எங்​களுக்​குக் கிடைத்த பெரும் பெரு​மை​யாகும். இது ஒட்​டுமொத்த பார்லே குடும்பத்திற்கும் ஒரு நெகிழ்ச்​சி​யூட்​டும் இன்ப அதிர்ச்​சி​யாக அமைந்​தது.

உள் ​நாட்​டுத் தொழில்​களைத் தொடர்ந்து ஊக்​கு​வித்து வரும் பிரதமருக்கு எங்​களது மனமார்ந்த நன்​றிகள். மத்​திய அரசு முன்னெடுத்து வரும் மேக் இன் இந்​தியா மற்​றும் உள்​ளூர் பொருள்களுக்​குக் குரல் கொடுப்​போம் ஆகிய திட்​டங்​களுக்​குப் பிரதமரின் இத்​தகைய பேச்சு மேலும் வலுசேர்க்கும். இவ்வாறு ஷா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT