வணிகம்

ரயிலில் கூடுதல் லக்கேஜுக்கு இனி ஆன்லைனில் முன்பதிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரயில் பயணி​கள் தற்​போது அனு​ம​திக்​கப்​பட்ட இலவச வரம்​புக்கு மேல் கூடுதல் லக்கேஜை எடுத்​துச் செல்ல, ரயில் புறப்​படு​வதற்கு முன் பார்​சல் அலு​வலகங்​களுக்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்​டி​யுள்​ளது.

இந்நிலை​யில், பயணச்​சீட்டை முன்​ப​திவு செய்​யும்​போதே கூடு​தல் உடைமை​களை தெரி​வித்து முன்​ப​திவு செய்​வதற்​கான ஆன்லைன் வசதியை ரயில்வே துறை இன்று (ஜூலை 31) அறி​முகப்​படுத்​துகிறது.

உறுதி செய்​யப்​பட்ட பயணச்​சீட்டு வைத்​திருக்​கும் பயணி​கள், http://www.parcel.indianrail.gov.in என்ற இணை​யதளத்​தில் பயணம் தொடங்​கும் மற்​றும் முடிவடை​யும் நிலை​யங்​கள், ரயில் எண்​கள், பார்​சல் விவரம் உள்​ளிட்ட தகவல்​களை தெரி​வித்து கூடு​தல் உடைமை​களை முன்​ப​திவு செய்​ய​லாம்.

SCROLL FOR NEXT