வணிகம்

வெங்காயம் கொள்முதல் விலை குவிண்டால் ரூ.2,125-ஆக உயர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வெங்​காயக் கொள்​முதலை அதி​கரிக்​க​வும், விவசாயிகளுக்​குச் சிறந்த வரு​வாயை உறுதி செய்ய​வும், வெங்காயம் கொள்​முதல் செய்​வதற்​கான விலையை மத்​திய அரசு நேற்று 13% உயர்த்​தி​யுள்​ளது.

இதைத் தொடர்ந்து வெங்​கா​யத்​தின் கொள்​முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.1,875-லிருந்து ரூ.2,125-ஆக உயர்ந்​துள்​ளது. இந்த விலை உயர்வு நேற்று முதலே அமலுக்கு வரு​வ​தாக மத்​திய அரசின் அதி​காரப்​பூர்வ அறிக்கை தெரி​வித்​துள்​ளது.

மத்​திய அரசின் சார்​பில் செயல்​படும் ‘விலை நிலைத்​தன்மை நிதியத்​தின்’ கீழ் சந்​தை​யில் வெங்​கா​யத்​தின் விலை குறைவதைத் தடுக்​கும் நோக்​கிலும், வெங்​காய வியா​பாரி​களுக்கு உதவும் நோக்​கிலும் கடந்த சில மாதங்​களில் 5 முறை வெங்​காய கொள்​முதல் விலையை மத்​திய அரசு உயர்த்​தி​யது. வெங்​காய கொள்​முதல் பரு​வம் தொடங்​கிய​தில் இருந்து விலை அடுத்​தடுத்து உயர்த்​தப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், மத்​திய வேளாண் துறை​யின் 2025-26-ம் ஆண்​டுக்​கான 2-வது முன்​ம​திப்​பீட்​டின்​படி, நாட்​டின் வெங்​காய உற்​பத்தி 307.37 லட்​சம் டன்​களாக இருக்​கும் என்று கணிக்​கப்​பட்​டுள்​ளது.

இது 2024-25-ல் இருந்த 307.67 லட்சம் டன் உற்​பத்​தி​யுடன் ஒப்பிடுகை​யில் ஏறக்​குறைய சமமான அளவு என்​று தெரியவந்​துள்​ளது.

SCROLL FOR NEXT