வணிகம்

உலகின் 5-வது பெரிய வர்த்தக மையமாக உருவெடுத்த என்எஸ்இ

நாஸ்டாக், ஹாங்காங் பங்குச் சந்தைகளை முந்தியது

செய்திப்பிரிவு

மும்பை: இந்​தி​யாவின் தேசியப் பங்குச் சந்தை, (என்எஸ்இ) சந்தை மூலதனத்​தின் அடிப்​படை​யில் அமெரிக்​கா​வின் நாஸ்டாக் மற்​றும் ஹாங்காங் பங்குச் சந்தை ஆகிய​வற்​றைப் பின்னுக்குத்தள்ளி, உல​கின் 5-வது பெரிய பட்​டியலிடப்​பட்ட பங்குச் சந்தையாக உரு​வெடுத்​துள்​ளது.

இந்​திய தேசிய பங்​குச் சந்தை கடந்த செப்​டம்​பர் மாதம் பங்​குச் சந்​தையில் பட்​டியலிடப்​பட்​டது. இதைத் தொடர்ந்து, என்​எஸ்இ பங்​கு​களின் விலை தொடர்ந்து ஏற்​றம் கண்டு வரு​கிறது. தற்​போதைய சந்​தைத் தரவு​களின்​படி, என்​எஸ்இ-யின் சந்தை மூலதனம் சுமார் 59.7 பில்​லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.5.56 லட்​சம் கோடி) உயர்ந்​துள்​ளது. இதன் மூலம், 58.1 பில்​லியன் டாலர் மதிப்பு கொண்ட ஹாங்​காங் பங்​குச் சந்​தையையும், 57.7 பில்​லியன் டாலர் மதிப்பு கொண்ட நாஸ்​டாக் நிறு​வனத்​தையும் என்​எஸ்இ முந்​தி​யுள்​ளது.

சந்தை மதிப்​பில் முதலிடத்​தில் சிஎம்இ குரூப் 111.05 பில்​லியன் டாலர் உள்​ளது. இதைத் தொடர்ந்து இன்​டர்​காண்​டினென்​டல் எக்ஸ்​சேஞ்ச் (95.50 பில்​லியன் டாலர்), டாய்ச் போர்ஸ் (65.00 பில்லியன் டாலர்), லண்​டன் ஸ்​டாக் எக்ஸ்​சேஞ்ச் குரூப் (60.30 பில்லியன் டாலர்) ஆகியவை உள்​ளன. மும்பை பங்​குச் சந்தையில் என்​எஸ்இ பங்கு விலை ரூ.47.80 (2.18%) உயர்ந்து ரூ.2,236.10 என்ற அளவில் வர்த்​தக​மானது.

இதன் மூலம் ரூ.5.56 லட்​சம் கோடி சந்தை மதிப்பை எட்​டிய என்எஸ்இ இந்​தி​யாவின் 9-வது பெரிய பட்​டியலிடப்​பட்ட நிறு​வனமாக உயர்ந்​துள்​ளது. இதன் மூலம், ரூ.5 லட்​சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட கோட்​டக் மஹிந்​திரா வங்கி மற்​றும் எல்​ஐசி ஆகிய முன்னணி நிறு​வனங்​களை என்​எஸ்இ பின்​னுக்​குத் தள்​ளி​யுள்​ளது. வங்கி, நிதிச் சேவை​கள் மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத் துறை ஜாம்​பவான்​களின் வரிசையில் தற்​போது என்​எஸ்இ-யும் இணைந்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT