வணிகம்

தமிழகம், புதுச்சேரியில் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தகவல்

மோகன் கணபதி

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்களின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு போதுமான அளவு உள்ளதாக, தமிழ்நாடு, புதுச்சேரி எண்ணெய் தொழில் துறை நிறுவனங்களுக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்களின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு போதுமான அளவு உள்ளது.

ஒட்டுமொத்த எரிபொருள் விநியோகம் சம்பந்தப்பட்ட கிடங்குகளில் இருந்து சில்லறை விற்பனை நிலையங்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி நடைபெறுகிறது. எரிபொருள் விநியோகங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் நுகர்வோர்களின் எரிபொருள் தேவைக்கேற்ப அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் எரிபொருள் இருப்பு உள்ளது.

எனவே பொதுமக்கள் பதட்டமடைய வேண்டாம் என்றும், எரிபொருளை அதிக இருப்பு வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கு தடையின்றி எரிபொருளை விநியோகம் செய்வதை உறுதி செய்ய எண்ணெய் சந்தை நிறுவனங்கள் உறுதிபூண்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT