புதுச்சேரி நிகழ்வில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் யுபிஐ தொடர்பான கேள்விகளை எழுப்பும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்த் ரங்கநாதன்.
படம்.எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: யுபிஐ மூலம் பணம் செலுத்தும் விவகாரத்தில் நுகர்வோரிடம் தனியாக வரி பெறுவதாக கூறி மக்களை தவறாக வழிநடத்த முயற்சி நடக்கிறது. இது வருத்தமளிக்கிறது.
இக்கட்டணம் நுகர்வோர் மீது சுமத்தப்படாது என்பது நூறு சதவீதம் உண்மை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். புதுச்சேரியில் ‘பாரத் சக்தி பாண்டி லிட் ஃபெஸ்ட்-2026' என்ற பெயரில் இலக்கிய திருவிழாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்த நிகழ்வில், மத்திய அமைச்சரிடம் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆனந்த் ரங்கநாதன் யுபிஐ குறித்த கேள்விகளை எழுப்பினார், அதற்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில்: யுபிஐ விவகாரம் எனக்கு வருத்தமளிக்கிறது.
அது வரியோ, கூடுதல் கட்டணமோ அல்ல. வசூலிக்கப்படும் கட்டணம் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் அது சேர்வதில்லை.
அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது; இது ரகசியமாக கசிய விடப்பட்டதல்ல, இது பொதுவெளியில் உள்ள ஒரு அறிக்கை.
யுபிஐ என்பது ஒரு வரி என்றும், அதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறி மக்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சிகள் நடக்கின்றன.
இந்தக் கட்டணம் நுகர்வோர் மீது சுமத்தப்படாது. 2,000 ரூபாய்க்குக் குறைவான பரிவர்த்தனைகளுக்கு நிச்சயமாக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.
2,000 ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, வசூலிக்கப்படும் கட்டணம் என்பது வணிகர் மற்றும் சேவை வழங்கும் வங்கி ஆகியோருக்கு இடையிலான விவகாரமாகும். அவர்களே அதைப் பெற்று, வைத்துக் கொண்டு, தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். இதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை.
யுபிஐ சேவையைத் தொடர்ந்து பராமரிக்கவும், போட்டித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் இது தேவைப்படுகிறது.
சர்வதேச கிரெடிட் கார்டுகள் இன்றும் கூட கட்டணத்தை வசூ லிக்கின்றன. நுகர்வோராகிய நாம் அதைச் செலுத்துகிறோம் யுபிஐ விஷயத்தில் அத் தகைய கட்டணம் நுகர்வோர் மீது சுமத்தப்படாது என்பது 100 சதவீதம் உண்மை.
இது ஒரு வரி அல்ல, இது எனக்கு வந்து சேரும் பணமும் அல்ல. வெறும் யூகத்தின் அடிப் படையிலோ அல்லது மேலோட் டமான எண்ணத்திலோ இதை ‘வரி' என்றோ, ‘அரசு மேலும் மேலும் வரிகளை விதிக்கிறது' என்றோ கருதக்கூடாது.
பிரதமரின் தலைமையின் கீழ் வரி குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுதான் வருகிறது. 2019-ல் கார்ப்பரேட் வரிமற்றும் வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன; மிகச் சமீபத்தில் வருமான வரியில் பெரும் குறைப்பு செய்யப்பட்டது.
எனவே, நாங்கள் எந்த வரியையும் உயர்த்தவில்லை. சந்தையில் உள்ள சிலர் பங்குச் சந்தை பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டதாகக் கூறலாம்; ஆனால் அது குறிப்பிட்ட வர்த்தக விருப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும், ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு அல்ல; இது அனைவருக்கும் தெரிந் ததே.
ஆக, நாங்கள் வரியை உயர்த்தவில்லை; மாறாக, செயல்பாட்டுத் திறனை மேம் படுத்தி வருகிறோம் என்றார்.