கோப்புப் படம்

 
வணிகம்

ஏப்.1 முதல் சுங்கச்சாவடிகளில் பணமாக செலுத்த முடியாது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் ரொக்கப் பணம், ஃபாஸ்டேக் போன்ற முறையில் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இனிமேல் பயணிகள் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் அல்லது யு.பி.ஐ. போன்ற டிஜிட்டல் முறைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்தத் திட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என தெரிகிறது.

தற்போது 98 சதவீதத்துக்கும் அதிகமான வாகன ஓட்டிகள் ஃபாஸ்டேக் முறையைப் பயன்படுத்தினாலும், ஒரு சில வாகன ஓட்டிகள் இன்னும் சுங்கக்கட்டணத்தைப் பணமாகவே செலுத்துகின்றனர். இதனால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.எனவே, முழுமையான டிஜிட்டல் பரிவா்த்தனை முறையை அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது.

          
SCROLL FOR NEXT