வணிகம்

எல்ஐசியின் 70-வது ஆண்டை முன்னிட்டு புதிய பாலிசிகள் அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை: எல்​ஐசி​யின் 70-வது ஆண்டு விழாவை முன்​னிட்டு எல்​ஐசி​யின் முதன்மை செயல் அதி​காரி​யும் மேலாண்மை இயக்​குநரு​மான ஆர்​.துரைஸ்​வாமி பீமா பிளாட்​டினம், ஜீவன் ரக் ஷா ஆகிய இரண்டு பாலிசிகளை அறி​முகப்​படுத்​தி​னார்.

இந்​தத் திட்​டங்​கள் செப்​. 7-ம் தேதி முதல் கிடைக்​கும். பீமா பிளாட்​டினம் என்​பது காப்​பீடு மற்​றும் சேமிப்பு இரண்​டை​யும் வழங்​கும் லாபப் பங்​களிப்​பற்ற பங்​குச்​சந்​தைத் திட்​ட​மாகும்.

இது ஒரு வரையறுக்​கப்​பட்ட பிரீமி​யம் திட்​டம். பிரீமி​யம் செலுத்​தும் காலத்​தில் செலுத்​தப்​பட்ட ஒவ்​வொரு ரூ.1,000 ஆண்டு பிரீமி​யத்​துக்கு ரூ.70 உத்​திர​வாத கூடு​தல் தொகை​யாக வரவு வைக்​கப்​படும்.

(பிரீமி​யம் செலுத்​தும் காலம் + 5)-வது ஆண்​டில் பாலிசி​தா​ரருக்கு அடிப்​படை காப்​பீட்​டுத் தொகை​யில் 70% பூஸ்​டர் வரு​வாய் பலனாக வழங்​கப்​படும். பே-அவுட் காலத்​தில் (பாலிசி காலம் மைனஸ் பாலிசி செலுத்​தும் காலம்) ஒவ்​வொரு ஆண்டு முடி​விலும் அடிப்​படைக் காப்​பீட்​டுத் தொகை​யில் 10% சீரான வரு​வாய் பலனாக வழங்​கப்​படும்.

குறைந்த பட்ச அடிப்​படைக் காப்​பீட்​டுத் தொகை ரூ.3 லட்​சம். அதி​கபட்ச அடிப்​படைக் காப்​பீட்​டுத் தொகைக்கு உச்​சவரம்பு இல்​லை. பிரீமி​யம் செலுத்​தும் காலம் 7, 10, 12, 15 மற்​றும் 18 வருடங்​கள்.

ஜீவன் ரக் ஷா ஒரு லாபப் பங்​களிப்​பற்ற பங்​குச்​சந்தை சாராத முழு இடர்க் காப்​பீட்​டுத் திட்​ட​மாகும். குறைந்​த​பட்ச நுழைவு வயது 18 ஆண்​டு​கள். அதி​கபட்ச நுழைவு வயது 45 ஆண்​டு​கள். குறைந்​த​பட்ச முதிர்வு வயது 33 ஆண்​டு​கள்.

அதி​கபட்ச முதிர்வு வயது 60 ஆண்​டு​கள். குறைந்​த​பட்ச அடிப்​படைக் காப்​பீட்​டுத் தொகை ரூ.5 லட்​சம். அதி​கபட்ச அடிப்​படைக் காப்​பீட்​டுத் தொகை ரூ.24 லட்​சம். பெண்​களுக்கு சிறப்பு பிரீமிய விகிதங்​கள் உண்​டு. கூடு​தல் விவரங்​களை www.licindia.in என்ற இணை​யதளத்​தைப்​ பார்த்​து​ அறிந்​து கொள்​ளலாம்.

SCROLL FOR NEXT