புதுடெல்லி: பாரத் 24 சேனல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புகழ்பெற்ற ‘‘பில்டிங் பாரத் லீடர்ஷிப் சம்மிட் - ரோட்மேப் டு விக்சித் பாரத் 2047’’ உச்சி மாநாடு, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இதில் பல மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், ரியல் எஸ்டேட் துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காக, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 'ட்ரீம் குழும' இணை நிறுவனர்களான மோகன்லால் கோயல் மற்றும் விஜய் சிங்கால் ஆகியோருக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சிறந்த சேவைக்கான விருதை வழங்கி கவுரவித்தார்.
இந்த மாநாட்டில் தேசிய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தொலைநோக்குப் பார்வை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.