வணிகம்

பிரீமியம் ஸ்பீடு போஸ்ட் சேவைகளை பிரபலப்படுத்த சென்னையில் நடமாடும் தியேட்டர் வேன் பிரச்சாரம் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: அஞ்​சல் துறை சார்​பில், பிரீமி​யம் ஸ்பீடு போஸ்ட் சேவை​களை பிரபலப்​படுத்​தும் நோக்​கில், நடமாடும் தியேட்​டர் வேன் பிரச்​சா​ரம் அண்​ணாநகரில் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய அஞ்​சல் துறை சார்​பில், ஆவணங்​கள் மற்​றும் பார்​சல்​களுக்கு உத்​தர​வாதத்​துடன் அடுத்த நாள் பட்​டு​வாடா வழங்​கும் ‘24 ஸ்பீடு போஸ்ட்’ மற்​றும் ஆவணங்​களுக்கு 2 நாட்​களுக்​குள் உத்​தர​வாதத்​துடன் பட்​டு​வாடா வழங்​கும் ‘48 ஸ்பீடு போஸ்ட்’ ஆகிய புதிய பிரீமி​யம் சேவை​கள் புதுடெல்​லி​யில் கடந்த மார்ச் மாதம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டன.

இந்த சேவை​கள் தொடர்​பாக, பொது​மக்​களிடையே விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​படு​கிறது. அதன் ஒரு பகு​தி​யாக, சென்னை நகர மண்​டலத்​தின் வடக்கு கோட்ட அஞ்​சல் துறை சார்​பில், புதி​தாக அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்ள பிரீமி​யம் ஸ்பீடு போஸ்ட் சேவை​களை பிரபலப்​படுத்​தும் வித​மாக, நடமாடும் தியேட்​டர் வேன் பிரச்​சா​ரம் நேற்று அண்​ணா நகரில் தொடங்கப்​பட்​டது.

இந்த வேன் பிரச்​சா​ரத்​தை, சென்னை நகர மண்டல அஞ்​சல் துறை இயக்​குநர் மேஜர் மனோஜ் கொடியசைத்து தொடங்கி வைத்​தார். இதுகுறித்​து, சென்னை நகர மண்டல அஞ்​சல் அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்னை நகரில் மொபைல் தியேட்​டர் வேன் பிரச்​சா​ரம் 60 நாட்​கள் நடை​பெறவுள்​ளது.

நகரின் முக்​கிய மக்​கள் கூடும் பகு​தி​களில் இவ்​வேன்​கள் இயக்​கப்​பட்​டு, பிரீமி​யம் ஸ்பீடு போஸ்ட் சேவை​களின் சிறப்​பம்​சங்​கள் குறித்து பொது​மக்​களுக்கு விளக்​கப்​படும்.

24 ஸ்பீடு போஸ்ட் சேவை, அவசர மற்​றும் காலக்​கெடு முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ஆவணங்​கள் மற்​றும் பார்​சல்​களுக்கு அடுத்த நாள் உத்​தர​வாதத்​துடன் கூடிய பட்​டு​வாடா வசதியை வழங்​கு​கிறது. முதல் கட்​ட​மாக, டெல்​லி, மும்​பை, சென்​னை, கொல்​கத்​தா, பெங்​களூரு, ஐதரா​பாத் ஆகிய பெருநகரங்​களில் இச்​சேவை அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

24 மற்​றும் 48 ஸ்பீடு போஸ்ட் சேவை​கள் முறையே குறிப்​பிட்ட கால வரம்​பிற்​குள் பட்​டு​வா​டாவை உறுதி செய்​வதுடன், ஒடிபி அடிப்​படையி​லான பாது​காப்​பான பட்​டு​வா​டா, வாரத்​தின் 7 நாட்​களும் பட்​டு​வா​டா, குறுஞ்​செய்தி மூலம் அனுப்​பு​கையை கண்​காணிக்​கும் வசதி, அதி​களவி​லான பதிவு​களுக்கு இலவச சேகரிப்பு வசதி உள்​ளிட்ட பல்​வேறு மேம்​பட்ட அம்​சங்​களைக் கொண்​டுள்​ளன. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

இந்​நிகழ்ச்​சி​யில், தமிழக அஞ்​சல் வட்ட உதவி தலைமை அஞ்​சல்​ துறை தலை​வர் (வணிக வளர்ச்​சி) கே.லெக் ஷ்மணன் பிள்​ளை, சென்னை நகர வடக்கு கோட்ட முது​நிலை அஞ்​சல் கோட்ட கண்​காணிப்​பளர் எஸ்​.​பாக்​கியலட்​சுமி, சென்னை நகர மண்டல அஞ்​சல்​ துறை உதவி இயக்​குநர்​ ஜி.​பாபு உள்​பட பலர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT