புதுடெல்லி: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், குடைகளுக்கான குறைந்தபட்ச இறக்குமதி விலையை ரூ.100 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் ரூ.100-க்கும் குறைவான மலிவு விலை குடைகளை இனி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது.
இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “விற்பனைக்கு தயாரான குடைகளுக்கான இறக்குமதி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 'கட்டுப்பாடற்ற' பிரிவில் இருந்த குடைகள், இனி 'கட்டுப்படுத்தப்பட்ட' பிரிவின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இருப்பினும், ஒரு குடையின் மதிப்பு (அடக்கவிலை, காப்பீடு மற்றும் சரக்குக் கட்டணம்) ரூ.100 அல்லது அதற்கு மேல் இருந்தால், அவற்றை தடையின்றி இறக்குமதி செய்யலாம்” என கூறப்பட்டுள்ளது.