கோப்புப் படம்

 
வணிகம்

மேகாலயாவில் 3 லட்சம் டன் நிலக்கரி வாங்கியதில் விதிகளை மீறிய சிமெண்ட் நிறுவனங்கள்

உயர் நீதிமன்ற கண்காணிப்புக் குழு புகார்

செய்திப்பிரிவு

ஷில்லாங்: மேகாலயா மாநிலத்​தில் உள்ள இரண்டு தனி​யார் சிமெண்ட் நிறு​வனங்​கள், உரிய ஆவணங்​களின்றி சுமார் 2.93 லட்​சம் மெட்​ரிக் டன் நிலக்​கரியை வாங்​கிய​தாக உயர்​ நீ​தி​மன்​றத்​தால் நியமிக்​கப்​பட்ட கண்​காணிப்​புக் குழு தனது சமீபத்​திய அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ளது.

மேகாலயா மாநிலத்​தில் சட்​ட​விரோத நிலக்​கரி சுரங்​கம் மற்​றும் போக்​கு​வரத்​தைக் கட்​டுப்​படுத்த, அம்​மாநில உயர்​ நீ​தி​மன்​றம் ஓய்​வு​பெற்ற நீதிபதி பி.பி. கடகே தலை​மை​யில் ஒரு குழுவை நியமித்​தது.

இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்திய இக்​குழு தனது அறிக்கையை வெள்​ளிக்​கிழமை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்தது. அந்த அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: குறிப்​பிட்ட இரண்டு சிமெண்ட் நிறு​வனங்​களும், கடந்த 2025-ம் ஆண்டு பிப்​ர​வரி முதல் இந்த ஆண்டு பிப்​ர​வரி மாதம் வரையி​லான காலக்​கட்​டத்​தில், மாநிலத்​திற்கு வெளியி​லிருந்து நிலக்​கரியைக் கொண்டு வந்​துள்​ளன. இதற்​காக, 2024-ம் ஆண்​டுக்​கான நிலை​யான செயல்​பாட்டு நடை​முறை​களின் கீழ் பெறப்பட வேண்​டிய கட்​டாய அனு​ம​தி​களை அவை பெற​வில்​லை.

குறிப்​பாக, கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் அந்​நிறு​வனங்​கள் அனு​மதி கோரி விண்​ணப்​பித்​திருந்த போதி​லும், தகுந்த அதி​காரி​களிடம் இருந்து அதற்​கான ஒப்​புதல் எது​வும் வழங்​கப்​பட​வில்​லை. அனு​மதி இல்​லாத நிலை​யிலும், சுமார் 2.93 லட்​சம் மெட்​ரிக் டன் நிலக்​கரி கொண்டு வரப்​பட்​டது விதி​மீறல் ஆகும்.

நிலக்​கரி கொண்டு வரப்​பட்​ட​தில் பல முறை​கேடு​கள் நடந்​துள்​ளது. கனிமப் போக்​கு​வரத்​துச் சீட்​டு​கள், வரி விலைப்​பட்​டியல், இ-வே பில்​கள், உற்​பத்​திச் சான்​றிதழ் மற்​றும் எடை​யிடும் விவரங்​கள் போன்ற அத்​தி​யா​வசிய ஆவணங்​கள் எது​வுமே முறை​யாகப் பராமரிக்​கப்​பட​வில்​லை. இவ்​வாறு அதில் சுட்​டிக்​காட்​டப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT