வணிகம்

டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே வாரத்தில் ரூ.1.54 லட்சம் கோடி சரிவு

செய்திப்பிரிவு

மும்பை: இந்​திய பங்​குச் சந்​தைகள் கடந்த வாரம் சரி​வில் முடிந்தன. வார அளவில் பார்க்​கும்​போது, பிஎஸ்இ சென்செக்ஸ் 639.61 புள்​ளி​கள் (0.84%) மற்​றும் என்எஸ்இ நிஃப்டி 171.55 புள்​ளி​கள் (0.72%) சரிவடைந்​தன.

இதனால் பங்​குச் சந்​தை​யில் பட்​டியலிடப்​பட்ட டாப் 10 நிறுவனங்களில் 7 நிறு​வனங்​களின் ஒட்​டுமொத்த சந்தை மதிப்பு கடந்த வாரத்​தில் சுமார் ரூ.1.54 லட்​சம் கோடி சரிந்​தது. இதில் நாட்டின் மிகப்​பெரிய நிறு​வன​மான ரிலை​யன்ஸ் இண்​டஸ்ட்​ரீஸ் மிக அதிக அளவாக ரூ.46,078 கோடி இழப்பை சந்​தித்​தது. இதன் தற்​போதைய சந்தை மதிப்பு ரூ.17,87,039 கோடி​யாக உள்​ளது.

ஹெச்​டிஎஃப்சி பேங்க் ரூ.33,333.06 கோடி குறைந்​து, ரூ.11,46,641.84 கோடி​யாக சரிந்​தது. பார்தி ஏர்​டெல் சந்தை மதிப்பு ரூ.25,408.96 கோடி சரிந்​து, ரூ.11,14,886.53 கோடி​யாக உள்​ளது. டிசிஎஸ் மதிப்பு ரூ.22,920.58 கோடி, இந்​துஸ்​தான் யுனிலீவர் சந்தை மதிப்பு ரூ.13,169.46 கோடி, பஜாஜ் ஃபை​னான்ஸ் சந்தை மதிப்பு ரூ.7,253.24 கோடி, ஐசிஐசிஐ பேங்க் சந்தை மதிப்பு ரூ.6,311.41 கோடி சரிந்​தது.

SCROLL FOR NEXT