புதுடெல்லி: வலி நிவாரணி, காய்ச்சல், அழற்சி எதிர்ப்பு போன்றவற்றுக்கு நிமிசுலைட் பயன்படுத்தப்படுகிறது. இது மாத்திரை, கேப்சூல், சிரப் என 3 வகைகளில் உள்ளன.
ஆனால், இந்த மாத்திரைகளில் 100 மி.கி. மேல் நிமிசுலைட் வேதிப் பொருள் கலந்திருப்பதால் மக்களுக்கு பல்வேறு பின்விளைவுகள் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து நிமிசுலைட் கலந்த மாத்திரைக்கு மத்திய சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், நிமிசுலைட் மாத்திரை, சிரப்புக்கு தடை விதித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
பொது நலன் கருதி இந்த மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இனிமேல் இந்த மருந்துகளை தயாரிக்கவும், விற்கவும், விநியோகம் செய்யவும் உடனடியாக தடை விதிக்கப்படுகிறது என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் புத்தாண்டையொட்டி பலத்த பாதுகாப்பு: மது குடித்தவர்களை வீட்டில் இறக்கிவிட ஏற்பாடு