வணிகம்

நீண்ட காலம் செயல்படாத பி.எப். கணக்குகளில் ரூ.1,000-க்கு குறைவாக இருந்தால் சந்தாதாரர் வங்கி கணக்கில் வரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி (பிஎப்) தொடர்பான ஒரு திட்​டத்​துக்கு மத்​திய தொழிலா​ளர் மற்​றும் வேலைவாய்ப்பு அமைச்​சகம் அனு​மதி அளித்​துள்​ளது.

இது குறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறுகை​யில், "ஒரு இபிஎப்ஓ கணக்​கில் தொடர்ந்து 3 ஆண்​டு​களுக்கு பங்​களிப்போ அல்​லது பரிவர்த்​தனையோ இல்​லா​விட்​டால் அது செயல்​பாட்​டில் இல்​லாத கணக்​காக வகைப்​படுத்​தப்​படும். இந்த கணக்​கு​களில் ரூ.1,000 அல்​லது அதற்கு குறை​வாக இருப்பு இருந்​தால், அந்த தொகை சந்​தா​தா​ரரின் வங்கி கணக்​கிற்கு நேரடி​யாக அனுப்பிவைக்​கப்​படும். இதற்கு பயனாளி​கள் கோரிக்கை வைக்கவோ அல்​லது ஆவணங்​களை சமர்ப்​பிக்​கவோ தேவையில்லை” என்று தெரி​வித்​தன.

          

புள்​ளி ​விவரப்​படி செயல்​பாட்​டில் இல்​லாத இபிஎப்ஓ கணக்​கு​கள் மொத்​தம் 31.86 லட்​சம் உள்​ளன. அவற்​றில் மொத்​தம் ரூ.10,903 கோடி வைப்​புத் தொகை உள்​ளது. இந்​நிலை​யில் சுமார் 6 லட்​சம் செயல்​ப​டாத கணக்​கு​களில் ரூ.1,000 அல்​லது அதற்​கும் குறை​வாக இருப்பு உள்​ளது. இந்த 6 லட்​சம் கணக்​கு​களில் மட்​டும் சுமார் ரூ.600 கோடி உரிமை கோரப்​ப​டா​மல் உள்​ளது.

SCROLL FOR NEXT