மும்பையில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீடு தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் (இடமிருந்து) கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இயக்குநர் இஷா அம்பானி, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் அம்பானி மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பங்கஜ் பவார் ஆகியோர் பங்கேற்றனர்.
மும்பை: நாட்டின் முன்னணி டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை நிறுவன மான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் தனது முதன்மை பொதுப்பங்கு வெளி யீட்டை (ஐபிஓ) மேற்கொள்ள உள்ளது. இது, இந்திய பங்குச்சந்தை வரலாற்றி லேயே மிகப்பெரிய ஐபிஓ ஆகும்.
இதுகுறித்து ஜியோ பிளாட்ஃ பார்ம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் அம்பானி கூறியதாவது: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.
மொத்தம் 27 கோடி புதிய பங்கு வெளியீடுகள் மூலம் நிறுவனம் ரூ.30,213 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை ரூ. 1,065 முதல் முதல் ரூ.1,119-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதன்மை முதலீட்டாளருக்கான ஏலம் அக்டோபர் 19-ம் தேதியும், பொதுமக்களுக்கான ஏலம் 21-ம் தேதியும் தொடங்க உள்ளது.
விண்ணபிக்க கடைசி நாள் அக். 23-ம் தேதி ஆகும். பங்குச் சந்தையில் பங்குகள் பட்டியலிடப்படும் நாள் அக்டோபர் 28-ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
பிரதமரின் 'டிஜிட்டல் இந்தியா' மற்றும் 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நாட்டின் அனைத்துக் குடிமக்களையும் இணைப்பதே ஜியோவின் பிரதான நோக்கம்.
கடந்த 10 ஆண்டுகளில் 53 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த டிஜிட்டல் டேட்டா போக்குவரத்தில் 60%-க்கும் அதிகமானவற்றை ஜியோவே கையாள்கிறது. ஒரு பயனர் மாதத்திற்குச் சராசரியாக 43.7 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்துகிறார்.
நிறுவனத்தின் நிதி நிலையை பொருத்தவரையில் வரிக்கு முந்தைய லாபம் ரூ.76,000 கோடியைக் கடந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் லாப வரம்பு 53.3% ஆக பதிவாகியுள்ளது.
உலகளவில் அதிக காப்புரிமை களுக்கு விண்ணப்பித்த முதல் 20 நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனம் ஜியோ மட்டுமே. ஜியோவின் பொறியாளர் கள் இணைந்து 7,220-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றுள்ளனர்.
அடுத்த 5 ஆண்டுகளில் 2ஜி-யிலிருந்து 4ஜி/5ஜி-க்கு மாறும் 24 கோடி பயனர்கள் உட்பட 34 கோடி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் ஏற்கெனவே 3,60,000-க்கும் மேற்பட்ட கோபுரங்களையும், 10 லட்சம் கி.மீ ஃபைபர் கேபிள் களையும் கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் வரவிருக்கும் 6ஜி தொழில்நுட்பத்தை, புதிய உள்கட்டமைப்பு செலவுகள் இன்றி மென்பொருள் புதுப்பித்தல் மூலமாகவே வழங்கிட கட்டமைப்பு தயாராக உள்ளது. இவ்வாறு ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.