வணிகம்

போதிய பயணிகள் இல்லாததால் குவைத், மும்பை விமானங்கள் ரத்து

செய்திப்பிரிவு

சென்னை: நேற்று முன் தினம் இரவு 8.25 மணிக்கு மும்​பை​யில் இருந்து சென்னை வர வேண்​டிய ஏர் இந்​தியா விமானம், சென்​னை​யில் இருந்து இரவு 9.05 மணிக்கு மும்பை செல்ல வேண்​டிய ஏர் இந்​தியா பயணி​கள் விமானம் ரத்து செய்​யப்​பட்​டன.

அதே​போல், குவைத்​தில் இருந்து நேற்று அதி​காலை 2.25 மணிக்கு சென்னை வரவேண்​டிய குவைத் ஏர்​லைன்ஸ் விமானம், நேற்று அதி​காலை 3.25 மணிக்கு சென்​னை​யில் இருந்து குவைத் செல்ல வேண்​டிய குவைத் ஏர்​லைன்ஸ் விமானம் ரத்து செய்​யப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது.

சென்னை விமான நிலை​யத்​தில் மும்​பை, குவைத் ஆகிய 4 விமானங்கள் ரத்து செய்​யப்பட்​டதற்கு போதிய பயணி​கள் இல்​லாததே என்று கூறப்​படுகிறது.

சென்​னை​யில் இருந்து நேற்று முன்​தினம் இரவு 8 மணி​யிலிருந்து நேற்று அதி​காலை வரை டெல்​லி, மும்​பை, கொல்​கத்​தா, புனே, ஹைத​ரா​பாத், பெங்​களூர், கொச்​சி, கோவை உள்​ளிட்ட 12 புறப்​பாடு விமானங்​கள் ஒரு மணி நேரத்​தில் இருந்து 2 மணி நேரம் வரை தாமத​மாக புறப்​பட்​டுச் சென்​றன.

SCROLL FOR NEXT