சென்னை: கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கோட்டக் சர்வீசஸ் ஃபண்ட் என்ற புதிய முதலீட்டு திட்டத்தை (என்எப்ஓ) அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த 4-ம் தேதி தொடங்கிய இதில் வரும் 18-ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000. இந்த திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் சேவைத் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்களுக்கு வழிவகை செய்கிறது. இது ஒரு திறந்தநிலை ஈக்விட்டி திட்டம் ஆகும்.
இதுகுறித்து கோட்டக் மஹிந்திரா அஸெட் மேனேஜ் மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிலேஷ் ஷா கூறும்போது, “கோட்டக் சர்வீசஸ் ஃபண்ட் மூலம், இந்தியாவின் சேவைப் பொருளாதாரத்தில் உருவாகி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கி, நீண்டகால மதிப்பை வழங்க நாங்கள் இலக்கு வைத்திருக்கிறோம்.
முதலீட்டாளர்களுக்கு நிலையான, நீண்டகால செல்வத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் எங்கள் முதலீட்டு உறுதிப்பாடு நிலை நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.