புதுடெல்லி: இந்தாண்டுக்கான தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தில் இந்தியர்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த இனிப்பு வகைகளில் காஜு கத்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. தீபாவளிப் பண்டிகைக் கால விற்பனை குறித்து ‘ஸ்விக்கி’ கூறியிருப்பதாவது: இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது ஆன்லைன் உணவு ஆர்டர்கள் 10.7 சதவீதம் அதிகரித்துள்ளன.
பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பட்டியலில் மசாலா தோசை, காஜு கத்லி மற்றும் பன்னீர் பட்டர் மசாலா முன்னிலை வகித்தன. இனிப்பு வகையில் காஜு கத்லி முதலிடத்தைப் பிடித்த நிலையில், அடுத்தபடியாக மோதீச்சூர் லட்டு, ரசகுல்லா மற்றும் குலாப் ஜாமூன் ஆகியவை அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் காஜு கத்லி முதலிடத்தைப் பிடித்தது.