வணிகம்

வணிக வாகனத் துறையில் தடம் பதிக்கும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம்: ‘ஆம்ப்ஸ்டார்’ மின்சாரப் பேருந்துகள், லாரிகள் அறிமுகம்

ஜி.பாலமுருகன்

ஜேஎஸ்​டபிள்யூ குழு​மம், ஆம்ப்​ஸ்​டார் என்ற புதிய பிராண்​டில் வணிக ரீதியி​லான மின்​சா​ரப் பேருந்​துகள், லாரி​களை அறி​முகம் செய்​துள்​ளது.

ஜேஎஸ்​டபிள்யூ குழு​மம், மின்​சார வாக​னத் தயாரிப்பு துறை​யில் தீவிரம் காட்டி வரு​கிறது. வணி​கப் போக்​கு​வரத்​தில் மின்​சார வாக​னங்​களின் பயன்​பாட்டை அதி​கரிக்​கும் நோக்​கில், தற்​போது ‘ஆம்ப்​ஸ்​டார்’ என்ற புதிய பிராண்​டில் மின்​சா​ரப் பேருந்​துகள் மற்​றும் லாரி​களை அறி​முகம் செய்​துள்​ளது. ஜேஎஸ்​டபிள்யூ குழு​மத்​தின் ஒரு பிரி​வான ஜேஎஸ்​டபிள்யூ கிரீன்​டெக் நிறு​வனம் சார்​பில் வடிவ​மைத்​து, உற்​பத்தி செய்​யப்​படும் இந்த மி்ன்​சா​ரப் பேருந்​துகள், லாரிகள் அறி​முக நிகழ்ச்சி மும்​பை​யில் நடை​பெற்​றது.

வாடிக்​கை​யாளரின் பயன்​பாட்​டுத் தேவை​கள் முழு​வதை​யும் பூர்த்தி செய்​யும் வகை​யில் இந்த புதிய பிராண்ட் வர்த்தக வாகன உற்​பத்​தி​யில் ரூ.2,500 கோடியை ஜேஎஸ்​டபிள்யூ குழு​மம் முதலீடு செய்​துள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வின் சத்​ரபதி சம்​பாஜிநகரில் 90 ஏக்​கர் பரப்​பள​வில் அமைந்​துள்ள மின்​சார வாகன உற்​பத்​தித் தொழிற்​சாலை​யில் ஆம்ப்​ஸ்​டார் வாக​னங்​கள் உற்​பத்தி செய்​யப்​படும் என்று ஜேஎஸ்​டபிள்யூ குழு​மம் தெரி​வித்​துள்​ளது.

முதல்​கட்​ட​மாக இங்கு ஆண்​டுக்கு 15 ஆயிரம் மின்​சா​ரப் பேருந்​துகள் மற்​றும் லாரிகள் உற்​பத்தி செய்​யப்பட உள்​ளன. வரும் காலத்​தில் ஆலையை விரிவுபடுத்​தி, உற்​பத்​தியை அதி​கரிக்​க​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

அறி​முக விழா​வில் ஜேஎஸ்​டபிள்யூ குழு​மத்​தின் தலை​வர் சஜ்ஜன் ஜிண்​டால் பேசும்போது, “நமது மக்​களை​யும் உடமை​களை​யும் வெளி​நாட்​டிலிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் எரிபொருளில் நகர்த்​து​வதற்கு பதிலாக, இந்​தி​யா​விலேயே உற்​பத்​தி​யாகும் மின்​சா​ரத்​தில் இயங்க வைப்​பதே எங்​கள் நோக்​கம். உலகளா​விய கச்சா எண்​ணெய் விலையை நம்​மால் கட்​டுப்​படுத்த முடி​யாது. ஆனால், அதைச் சார்ந்​திருப்​பதை கட்​டுப்​படுத்த முடி​யும்.

இந்​தியா பயணிக்​கும் வழியையே மாற்​று​வதற்​கான ஓர் ஊக்​கி​யாக ஆம்ப்​ஸ்​டார் இருக்க வேண்​டும் என்று விரும்​பு​கிறோம். ஒவ்​வொரு வாடிக்​கை​யாள​ரும் மின்​சா​ரப் பேருந்து மற்​றும் லாரி​களைத் தேர்ந்​தெடுக்​கும் தைரிய​மான முடிவை எடுக்க வேண்​டுமென்​றால், அதற்​கான பொருளா​தா​ரச் சாதகங்​கள் தெளி​வாக இருக்க வேண்​டும். இன்று தொடங்​கும் ஆம்ப்​ஸ்​டார் பயணம் இந்​தி​யா​வின்​ வணி​க தடத்​தை மாற்​றியமைக்​கும்​” என்​றார்.

- மும்​பையி​லிருந்து ஜி.​பால​முரு​கன்

SCROLL FOR NEXT