வணிகம்

1 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களுடன் வரலாறு படைத்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறு​வனத்​தின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) 1 கோடிக்​கும் அதி​க​மான விண்ணப்பங்களைக் கடந்து வரலாறு படைத்​துள்​ளது.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ மூலம் 27 கோடி புதிய பங்​கு​களை வெளி​யிட்டு ரூ.30,213 கோடியை திரட்ட திட்​ட​மிட்​டுள்​ளது. பங்கு விலை வரம்பு ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாட் அளவு 12 பங்​கு​கள் ஆகும். அதிகபட்ச விலை உச்ச வரம்​பின்​படி, ஒரு சில்​லறை முதலீட்​டாளர் குறைந்​த​பட்​சம் ரூ.13,428 முதலீடு செய்ய வேண்​டும்.

இந்த பங்கு வெளியீட்​டின் மூலம் கிடைக்​கும் தொகை​யில் ஒரு பகுதியை, தனது முக்​கிய துணை நிறு​வனமான ரிலை​யன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் பெற்​றுள்ள கடன்​களைத் திருப்பிச் செலுத்​தப் பயன்​படுத்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் திட்டமிட்​டுள்​ளது. மீதமுள்ள தொகை பொது​வான கார்ப்​பரேட் தேவை​களுக்​குப் பயன்​படுத்​தப்​படும். சில்​லறை முதலீட்டாளர்களுக்​கான ஏலம் கடந்த 21-ம் தேதி தொடங்கப்பட்டது.

மூன்று மடங்​குக்​கும் அதி​க​மான விண்​ணப்​பங்​கள் குவி்ந்​தன. இந்த நிலை​யில், ஏலத்​தின் மூன்​றாவது மற்​றும் கடைசி நாளான நேற்று மதி​யம் 12.24 மணி நில​வரப்​படி, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ 7.41 மடங்கு சப்​ஸ்கிரைப் செய்​யப்​பட்​டது. இதன் மூலம், பங்கு​கள் வேண்டி வந்த விண்​ணப்​பங்​களின் எண்​ணிக்கை 1 கோடியை தாண்​டியது. உல​களவில் இந்த மைல்​கல்லை எட்​டிய முதல் ஐபிஓ இது​வாகும் என்று ஜியோ நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

இந்​தச் சாதனை அறி​விக்​கப்​பட்​டபோது ஏலத்​துக்கு இன்​னும் ஐந்து மணிநேரம் மீதமிருந்​ததுடன், இறுதி விண்​ணப்​பங்​களின் எண்ணிக்கை மேலும் அதி​கரிக்​கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரீ எனர்​ஜிஸ் நிறு​வனம் பெற்ற சுமார் 97 லட்​சம் விண்​ணப்​பங்​கள் முந்​தைய சாதனையாகும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT