வணிகம்

பங்குச் சந்தை முதலீட்டாளர் எண்ணிக்கை 3 மடங்கு உயர்வு

செபி தலைவர் பாண்டே தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: இந்​திய தேசி​யப் பங்​குச் சந்தை உறுப்​பினர்​கள் சங்கத்தின் (ANMI) 15-வது சர்​வ​தேச மூலதனச் சந்தை மாநாடு 2026 சென்னை​யில் நடை​பெற்​றது.

இதில் இந்​திய பங்​குச் சந்தை பரிவர்த்​தனை வாரி​யத்​தின் (செபி) தலை​வர் துஹின் காந்த பாண்டே பேசி​ய​தாவது: "இந்​தி​யா​வின் மூல தனச் சந்​தைகள், பங்​குச் சந்​தை, டெரிவேட்​டிவ்​ஸ், பரஸ்பர நிதி​கள், ரியல் எஸ்​டேட் முதலீட்டு அறக்​கட்​டளை​கள் (ஆர்​இஐடி), உள்​கட்​டமைப்பு முதலீட்டு அறக்​கட்​டளை​கள் மற்​றும் கார்ப்​பரேட் பத்​திரங்​கள் என அனைத்​துத் துறை​களி​லும் பெரும் எழுச்சி கண்டு வரு​கிறது.

குறிப்​பாக, இந்​திய பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்​வோர் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது. கடந்த 2020-ல் 4.3 கோடி​யாக இருந்த முதலீட்​டாளர் எண்​ணிக்கை இப்​போது 3 மடங்கு அதிகரித்து 13.7 கோடி​யாகி உள்​ளது. இதுபோல நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்​களில் 311 நிறு​வனங்​கள் புதிய பங்குகளை வெளி​யிட்டு (ஐபிஓ) ரூ.1.7 லட்​சம் கோடி திரட்டி உள்​ளன. இவ்​வாறு துஹின்​ ​காந்​த ​பாண்​டே கூறி​னார்​.

SCROLL FOR NEXT