வணிகம்

ரெனாஃப்ளெக்ஸ் ஃபைபர் பலகைகள் அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை: ஈரோட்​டைச் சேர்ந்த முன்​னணி கட்​டு​மானப் பொருட்கள் உற்​பத்தி நிறு​வன​மான ரெனாட்​டஸ் குழு​மத்​தின் ரெனா​கான் பிராண்ட், ரூ.350 கோடி முதலீட்​டில் ரெனாஃப்ளெக்ஸ்’ ஃபைபர் சிமெண்ட் பலகைகளை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது.

இது குறித்து ரெனாட்​டஸ் குழு​மத்​தின் தலை​வரும் மேலாண்மை இயக்​குநரு​மான ஆர்​.பி. செல்​வசுந்​தரம் கூறுகை​யில், “ரெ​னாஃப்​ளெக்ஸ் ஃபைபர் சிமெண்ட் பலகை​களின் அறி​முகம், கட்​டு​மான நடவடிக்​கை​யில் முழு​மை​யான தீர்​வு​களை வழங்​கும். ரூ.350 கோடி முதலீட்​டில் இந்த தயாரிப்பு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

மத்​திய அரசின் ‘மேக் இன் இந்​தி​யா’ மற்​றும் ‘விஷன் 2047’ இலக்குகளுக்கு ஏற்ப, அதிவேக​மான, பாது​காப்​பான மற்​றும் பசுமை​யான கட்​டு​மானங்​களுக்கு இந்​தப் பலகைகள் பெருமளவில் உதவும்” என்​றார்.

ஆந்​திர மாநிலம் நாயுடு​பேட்​டை​யில் உலகத் தரத்​திலான ஒருங்கிணைந்த உற்​பத்தி ஆலையை அமைத்​துள்ள இந்நிறுவனம், ஏஏசி பிளாக்​கு​கள், ரேபிட் வால் பேனல்​கள் மற்​றும் ஃபைபர் சிமெண்ட் பலகைகளை உற்​பத்தி செய்​ய​வுள்​ளது. ஒரே ஆண்​டில் கட்​டப்​பட்​டுள்ள இந்த ஆலை​யின் மூலம், ‘லேமி​னார் ஃபுளோ’ என்ற அதிநவீன தொழில்​நுட்​பம் இந்​தி​யா​வில் முதன்​முறை​யாக அறி​முகப்​படுத்​தப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT