வணிகம்

இண்டிகோ விவகாரம்: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இண்​டிகோ விமானச்​சேவை ரத்து தொடர்​பான விவ​காரத்​தில் 4 அதி​காரி​களை சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம் ​(டிஜிசிஏ) சஸ்​பெண்ட் செய்​துள்​ளது.

இந்​தியா முழு​வதும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் நிறுவன விமான சேவை​கள் கடந்த 9 நாட்​களாக பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. நேற்று சென்னை விமான நிலை​யத்​தில் 10-வது நாளாக 36 இண்​டிகோ விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. அதே​போல் பெங்​களூரு விமான​ நிலை​யத்​திலிருந்து 50 விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இந்​நிலை​யில் 4 விமான செயல்​பாட்டு ஆய்​வாளர்​களை(எஃப்​ஓஐ) சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம்​(டிஜிசிஏ) சஸ்​பெண்ட் செய்து உத்​தர​விட்​டுள்​ளது.

இண்​டிகோ விமானச் சேவை​ பிரச்​சினை​யில் சரிவர செயல்​படத் தவறிய விமான செயல்​பாடு மற்​றும் பாது​காப்பை மேற்​பார்வை செய்து வந்த அந்த 4 விமான செயல்​பாட்டு ஆய்வாளர்​களை டிஜிசிஏ நேற்று சஸ்​பெண்ட் செய்​துள்​ளது.

ஆய்​வாளர்​கள் ரிஷ் ராஜ் சாட்​டர்​ஜி, சீமா ஜம்​னானி, அனில் குமார் போக்​ரி​யால், பிரி​யம் கவுஷிக் ஆகியோர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட அதி​காரி​கள் ஆவர். விமான ரத்​துகளால் பல்​வேறு விமான நிலை​யங்​களில் பயணி​கள் நெரிசல், தாமதம், குழப்​பம் ஆகியவை அதி​கரித்த நிலை​யில், இதற்​கான உண்மை காரணங்​களை ஆராய, டிஜிசிஏ 4 பேர் கொண்ட ஒரு சிறப்பு குழுவை அமைத்​துள்​ளது. அந்​தக் குழு அளித்த அறிக்​கை​யின் அடிப்​படை​யில் 4 பேர் நேற்று சஸ்​பெண்ட்​ செய்​யப்​பட்​டுள்​ளனர்​.

SCROLL FOR NEXT