வணிகம்

விமானிகள் பற்றாக்குறையால் 5 நாட்களாக முடங்கிய இண்டிகோ நிறுவன விமான சேவை சீராகிறது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இண்​டிகோ விமான சேவை​யில் கடந்த 5 நாட்​களாக ஏற்​பட்ட முடக்​கம் நேற்று முதல் சீராகி வரு​வ​தாக அந்​நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

விமானிகள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் நாட்டின் மிகப்பெரிய இண்​டிகோ விமான நிறுவன சேவை கடந்த 5 நாட்​களாக கடுமை​யாக பாதித்​தது. இத னால் 2 ஆயிரத்​துக்கு மேற்​பட்ட விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதனால் பயணி​கள் கடும் சிரமத்​துக்கு ஆளாகினர்.

இந்​நிலை​யில் விமான சேவை​களை சீர்ப்​படுத்​தும் பணியில் இண்​டிகோ நிறு​வனம் நேற்று தீவிர​மாக இறங்​கியது. நேற்று 1,500 விமான சேவை​களை வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டது. 95 சதவீத நெட்​வொர்க் இணைப்பு நேற்று மீண்​டும் ஏற்​படுத்​தப்​பட்​ட​தாக இண்​டிகோ நிறு​வனம் தெரி​வித்​தது.

இதன் காரண​மாக டெல்லி விமான நிலை​யத்​தில் நேற்று காலை கூட்​டம் குறை​வாக இருந்​தது. ஜம்​மு, அமிர்​தசரஸ், அகம​தா​பாத், நாக்​பூர் போன்ற இடங்​களுக்​கான விமான சேவைகள் மட்​டுமே ரத்து செய்​யப்​பட்​டன. மும்​பை​யில் 8 விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன.

நேற்று 1,500 விமான சேவை​களை வழங்​கிய​தாகவும், 95 சதவீத நெட்​வொர்க் மீண்​டும் ஏற்​படுத்​தப்​பட்​ட​தாக​வும் இண்​டிகோ நிறு​வனம் தெரி​வித்​தது. இதனால் விமான சேவை​யில் ஏற்​பட்ட முடக்​கம் நேற்று முதல் சீராக தொடங்​கியது.

சிஇஓ விளக்கம்: இண்டிகோ விமான நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பீட்டர் எல்பர்ஸ் தனது ஊழியர்களுக்கு நேற்று வெளியிட்ட வீடியோவில், “விமான சேவை படிப்படியாக சீரடைந்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 1,650 ஆக அதிகரிக்கும். 75 சதவீத விமானங்கள் சரியான நேரத்துக்கு இயக்கப்படுகின்றன. விமான சேவை ரத்து செய்யப்பட்டால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனவே, ரத்து செய்யப்படும் விமானங்களுக்கு முன்பதிவு செய்தவர்கள் விமான நிலையத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

இதுவரை ரூ.610 கோடி ரீபண்ட்: இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்குள் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பித் தர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி ரூ.610 கோடியை அந்நிறுவனம் திருப்பி அளித்திருப்பதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் பயணிகளின் 3 ஆயிரம் உடமைகளையும் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

SCROLL FOR NEXT