வணிகம்

கூகுளில் ரூ.4.2 கோடி சம்பள வேலையை துறந்து உணவகம் தொடங்கி ரூ.21.7 கோடி ஈட்டிய இந்திய இளைஞர்!

செய்திப்பிரிவு

டெக்சாஸ்: அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணத்​தைச் சேர்ந்​த இந்திய வம்சாவளி சலாஹுதீன் அப்​துல்​-​காஃபி (35). இவர் மைக்​ரோ​சாப்ட், கூகுள், யூடியூப் மற்​றும் குரூஸ் போன்ற உலகின் முன்னணி தொழில்​நுட்ப நிறு​வனங்​களில் 14 ஆண்​டு​கள் பணியாற்​றிய​வர். அங்கு இவருக்கு ஆண்​டுக்கு சுமார் ரூ.4.25 கோடி சம்​பள​மாக வழங்​கப்​பட்டது.

தொழில்​நுட்​பத் துறை என்​பது மக்​களின் வாழ்க்​கையை மேம்​படுத்​து​வதை விட, வெறும் பணத்தை மட்​டுமே குறிக்​கோளாகக் கொண்டு இயங்​கு​வ​தாக உணர்ந்த அப்​துல்​-​காஃபி, விரக்​தி​யில் வேலையை விட்டு விட்டார். சான் பிரான்​சிஸ்​கோ​விலிருந்து வெளி​யேறிய அவர், தனது வரு​மானத்​தில் 50 சதவீதத்​திற்​கும் மேலாகக் குறைத்​துக் கொண்​டு, ஒரு மதச்​சார்​பற்ற லாப நோக்​கற்ற அமைப்​பில் இணைந்​தார். அந்​தப் பணி​யுடன் சேர்த்​து, பகுதி நேர​மாகத் தனது நண்​பர்​களுக்கு 'பார்​பெக்​யூ' முறை​யில் உணவு சமைத்து விருந்​தளிக்​கத் தொடங்​கி​னார். இவரது தனித்​து​வ​மான சமையல் முறை நண்​பர்​களிடையே பெரும் வரவேற்​பைப் பெற்றது.

இது குறித்து அப்​துல்​-​காஃபி கூறிய​தாவது: கடந்த டிசம்​பர் 2024-ல் ‘காஃபி பிபிக்​யூ' என்ற ஹலால் உணவகத்​தைத் தொடங்​கினேன். முதல் முறை என்​ப​தால் 3 நாட்​களுக்​குத் தேவை​யான உணவைத் தயாரித்து வைத்​திருந்​தோம். ஆனால், திறந்த முதல் நாளி​லேயே அனைத்​தும் விற்​றுத் தீர்ந்​து​விட்​டன. அன்றே இரவோடு இரவாக மீண்​டும் சமைக்​கத் தொடங்​கினோம். இவ்​வாறு அப்​துல்​-​காஃபி கூறி​னார்.

குறுகிய காலத்​திலேயே காஃபி பிபிக்யூ உணவகம் டெக்​சாஸ் மாகாணம் மட்​டுமின்​றி, அமெரிக்கா முழு​வதும் பிரபலமானது. கடந்​தாண்டு மட்​டும் இந்த உணவகம் மூலம் சுமார் ரூ.21.7 கோடி வரு​வாய் ஈட்​டப்​பட்​டுள்​ளது. நடப்பு ஆண்​டில் இந்த வரு​வாய் ரூ.37.8 கோடி​யாக உயரும் என கணிக்​கப்​பட்​டுள்​ளது.

எனினும், உணவகத்​தைத் தொடங்க வாங்​கிய முதலீட்​டுத் தொகை​யான 1 மில்​லியன் டாலர் கடனை இன்​னும் முழு​மை​யாக அடைக்​காத​தால், உணவகம் லாபத்​தில் இயங்​கி​னாலும், தான் இன்​னும் ஒரு ரூபாய் கூட சம்​பள​மாக எடுத்​துக்​கொள்​ளாமல், தனது பழைய சேமிப்​புப் பணத்​தைக் கொண்டே வாழ்க்​கையை நடத்தி வரு​வ​தாக அப்​துல்​-​காஃபி நெகிழ்ச்​சி​யுடன் கூறுகிறார்.

SCROLL FOR NEXT