வணிகம்

பங்​குச் சந்தை மோகத்தால் ரூ.2.3 கோடியை இழந்த இந்தியர்

செய்திப்பிரிவு

ஒட்​டாவா: பங்​குச் சந்தை மீதான மோகத்​தால் கனடா​வில் வசிக்கும் இந்​திய இளைஞர் ரூ.2.3 கோடியை இழந்​துள்​ளார்.

இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த அக்​சய் சாப்ரா (31), கனடா​வின் கிரேட்​டர் டொரன்டோ நகரில் வசித்து வரு​கிறார். அவருக்கு 4 வயது இருக்​கும்​போது இந்​தி​யா​வில் இருந்து கனடாவுக்கு அவரது பெற்​றோர் குடிபெயர்ந்​தனர். சிறு வயது முதலே அக்​சய் சாப்​ரா​வுக்கு பங்​குச் சந்தை மீது மோகம் ஏற்​பட்​டது. இதன் காரண​மாக தற்​போது அவர் பங்​குச் சந்தை வர்த்​தகத்​தில் ரூ.2.3 கோடியை இழந்​துள்​ளார்.

இதுகுறித்து அக்​சய் சாப்ரா கூறிய​தாவது: கடந்த 2024, 2025-ம் ஆண்​டு​களில் கனடா​வில் வாடகை கார் ஓட்​டுந​ராக பணி​யாற்​றினேன். சில காலம் தனி​யார் நிறு​வனங்​களில் பாது​காவல​ராக பணி செய்​தேன். அப்​போது முதலே கனடா பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்ய தொடங்​கினேன். இதன்​மூலம் கணிச​மான லாபம் கிடைத்​தது.

பின்​னர் மென்​பொருள் நிறு​வனத்​தில் வேலை கிடைத்​தது. கைநிறைய ஊதி​ய​மும் கிடைத்​தது. இதன் பிறகு பங்​குச் சந்தையில் அதிக தொகையை முதலீடு செய்​யத் தொடங்​கினேன். ஒரு நாளில் 16 மணி நேரம் பங்​குச் சந்தை வர்த்​தகத்​தில் மூழ்கினேன். சில நேரங்​களில் லாபம் கிடைத்​தது. சில நேரங்களில் நஷ்டம் ஏற்​பட்​டது. ஆனால் பங்​குச் சந்தை மீதான மோகத்​தால் எனது சேமிப்​பு, ஊதி​யம் என அனைத்​தை​யும் பங்குகளில் முதலீடு செய்து வந்​தேன்.

அண்​மை​யில் அமெரிக்​கா​வின் தனி​யார் விண்​வெளி நிறு​வன​மான ஸ்பேஸ் எக்ஸ் உட்பட பல்​வேறு நிறு​வனங்​களின் பங்குகளில் முதலீடு செய்​தேன். இதில் எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்​டிருக்​கிறது. ஒட்​டுமொத்​த​மாக ரூ.2.3 கோடியை இழந்து விட்டேன். ஆனாலும் பங்​குச் சந்தை வர்த்​தகம் மீதான எனது ஈர்ப்பு குறையவில்​லை. தொடர்ந்து பங்​கு​களில் முதலீடு செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT