வணிகம்

சீனாவுக்கான இந்திய பொருட்கள் ஏற்றுமதி 39% அதிகரிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 5 மாதங்​களில் சீனா, ரஷ்​யா, பிரேசில், தென்னாப்​பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடு​களுடனான இந்தியாவின் வர்த்​தகம் 34 சதவீதம் அதி​கரித்துள்​ளது. இதில் சீனா​வுக்​கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி 39 சதவீதம் அதி​கரித்​துள்ளது. தென்​னாப்​பிரிக்கா​வுக்​கான ஏற்​றுமதி 58 சதவீதம், பிரேசிலுக்கான ஏற்​றுமதி 13 சதவீதம், ரஷ்​யா​வுக்​கான ஏற்​றுமதி 11 சதவீதம் வரை அதி​கரித்து உள்​ளது.

இதுகுறித்து மத்​திய வணிக வரித் துறை வட்​டாரங்​கள் கூறும்போது,‘‘கடந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் சீனா​வுக்​கான இந்திய பொருட்​களின் ஏற்​றுமதி ரூ.1,35,375 கோடி​யாக இருந்​தது. இது, 2025-26-ம் நிதி​யாண்​டில் ரூ.1,84,965 கோடி​யாக அதிகரித்துள்ளது. சீனா​வி்லிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களின் அளவு அதி​க​மாகவே இருந்து வரு​கிறது’’ என்று்​ தெரிவித்​தன.

SCROLL FOR NEXT