வணிகம்

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.4% வளரும்: பொருளாதார ஆய்வறிக்கை முக்கிய அம்சங்கள்

நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பு நிதி​யாண்​டில் இந்​திய பொருளா​தா​ரம் 7.4% வளரும் என்​று பொருளா​தார ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்கப்பட்டுள்​ளது.

நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடர் நேற்று முன்​தினம் தொடங்​கியது. வரும் பிப்​ர​வரி 1ம் தேதி வரும் 2026- 27 நிதியாண்டுக்​கான மத்​திய பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தாக்​கல் செய்ய உள்​ளார். ஒவ்​வொரு ஆண்​டும் நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்​வதற்​காக, நாடாளுமன்​றத்​தில் பட்ஜெட் தாக்​கல் செய்​யப்​படு​வதற்கு முன்பு பொருளா​தார ஆய்வறிக்கையை மத்​திய அரசு தாக்​கல் செய்​வது வழக்​கம்.

          

இது பொருளா​தா​ரத்​தின் குறுகிய கால மற்​றும் நடுத்தர கால வாய்ப்​பு​கள் குறித்த கண்​ணோட்​டத்​தை​ வழங்​கும். அந்த வகையில், 2025- 26 நிதி​யாண்​டுக்​கான பொருளா​தார ஆய்வறிக்கையை மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் மக்களவை​யில் நேற்று தாக்​கல் செய்​தார்.

அதில் இடம்​பெற்​றுள்ள முக்​கிய அம்​சங்​கள் வரு​மாறு, தீவிரமடைந்து வரும் புவி​சார் அரசி​யல் பதற்​றம், வர்த்​தகப் போர் உள்​ளிட்ட காரணங்​களால் உலகளா​விய சூழல் தொடர்ந்து பலவீன​மாகவே உள்​ளது. இத்​தகைய பின்​னணி​யில், இந்​தி​யா​வின் செயல்​பாடு தனித்து நிற்​கிறது. நடப்பு 2025- 26 நிதி​யாண்​டில் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7.4 சதவீத​மாக இருக்​கும் எனக் கணிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்ந்து நான்​காவது ஆண்​டாக இந்​தியா மிக வேக​மாக வளர்ந்து வரும் பெரிய பொருளா​தார நாடாக இருப்​பதை உறு​திப்​படுத்​துகிறது. இது​போல 2026- 27 நிதி​யாண்​டில் ஜிடிபி 6.8 முதல் 7.2% வளரும் என கணிக்​கப்​பட்​டுள்​ளது.

விநி​யோகத்​தைப் பொறுத்​தவரை, சேவைத் துறை வளர்ச்​சி​யின் முக்​கிய உந்து சக்​தி​யாக நீடிக்​கிறது. இத்​துறை 9.1% வளர்ச்​சியை எட்​டும். மத்​திய அரசின் வரு​வாய் ஜிடிபி​யில் 9.2 சதவீத​மாக வலுவடைந்​துள்​ளது. நேரடி வரி செலுத்​து​வோர் எண்​ணிக்கை 2025 நிதி​யாண்​டில் 9.2 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. 2025 ஏப்​ரல் முதல் டிசம்​பர் வரை​யில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.17.4 லட்​சம் கோடியாக இருந்​தது.

இது முந்​தைய ஆண்​டை​விட 6.7% அதி​கம். மத்​திய அரசின் மூலதன செல​வினம் 2025 நிதி​யாண்​டில் ஜிடிபி​யில் 4 சதவீத​மாக அதி​கரித்​துள்​ளது. அதிக அளவி​லான பொது முதலீடு​களை தொடர்ந்து மேற்​கொண்டு வந்​த​போ​தி​லும், இந்​தியா தனது கடன்​-ஜிடிபி விகிதத்தை 2020-லிருந்து சுமார் 7.1 சதவீதம் வரை குறைத்​துள்​ளது.

வங்​கித் துறை செயல்​பாடு​கள்: நாட்​டின் பணவியல் மற்​றும் நிதியியல் துறை 2026 நிதி​யாண்​டில் வலு​வான செயல்​பாட்டை வெளிப்​படுத்தி உள்​ளது. வணிக வங்​கி​களின் சொத்து தரம் முன்னேறி உள்​ளது. 2025 செப்​டம்​பர் நில​வரப்​படி, மொத்த வாராக் கடன் விகிதம் 2.2% ஆகவும் நிகர வாராக் கடன் விகிதம் 0.5% ஆகவும் குறைந்​துள்​ளது. 2025 டிசம்​பர் நில​வரப்​படி, வங்​கி​களின் மொத்த கடன் வளர்ச்சி முந்​தைய ஆண்​டை​விட 14.5% அதி​கரித்​துள்​ளது. இது 2024-ல் 11.2% ஆக இருந்​தது.

பிரதம மந்​திரி ஜன் தன் திட்​டத்​தின் கீழ் 2025 மார்ச் வரை 55.02 கோடி கணக்​கு​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. குறு, சிறு நிறுவனங்களுக்கு நிதி வழங்​கும் முத்ரா திட்​டத்​தின் கீழ் 55.45 கோடி பேருக்கு ரூ.36.18 லட்​சம் கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

2026 நிதி​யாண்​டில் (9 மாதங்​களில்) 2.35 கோடி புதிய டிமேட் கணக்கு​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம் மொத்த டிமேட் கணக்கு எண்​ணிக்கை 21.6 கோடியைத் தாண்டி உள்​ளது. பரஸ்பர நிதி முதலீட்​டாளர்​கள் எண்​ணிக்கை 5.9 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. இதில் 3.5 கோடி பேர் 2-ம் கட்ட நகரங்​களைச் சேர்ந்​தவர்​கள் ஆவர்.

சர்​வ​தேச மதிப்​பீடு: நாட்​டின் ஒழுங்​கு​முறை தரம் முறை​யாக உயர்ந்து வரு​வது சர்​வ​தேச அளவில் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. 2025-ல் சர்​வ​தேச நாணய நிதி​யம் மற்​றும் உலக வங்கி ஆகியவை இணைந்து நடத்​திய நிதித் துறை மதிப்​பீட்டு திட்​டத்​தின் மூலம் இந்த அங்​கீ​காரம் கிடைத்​துள்​ளது.

வேளாண்மை துறை: சிறந்த பரு​வ​மழை காரண​மாக, 2024-25 வேளாண் ஆண்​டில் நாட்​டின் உணவு தானிய உற்​பத்தி 3,577.3 லட்​சம் மெட்​ரிக் டன்னை எட்​டியது. இது முந்​தைய ஆண்​டை​விட 254.3 லட்​சம் டன் அதி​கம். பிஎம் கிஸான் திட்​டம் தொடங்​கிய​தில் இருந்து இது​வரை விவ​சா​யிகளுக்கு ரூ.4.09 லட்​சம் கோடி நிதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

14 துறை​களில் செயல்​படுத்​தப்​படும் உற்​பத்தி சார்ந்த ஊக்​கத் தொகை திட்​டம் மூலம் ரூ.2 லட்​சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 12.6 லட்​சம் வேலை வாய்ப்பு உரு​வாகி உள்​ளது.

சூரிய சக்தி மற்​றும் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி உற்​பத்​தி​யில் இந்தியா உலகள​வில் 3-வது இடத்​தில் உள்​ளது. நிதி ஆயோக் கணக்கீட்​டின்​படி, பன்​முக வறுமைக் குறி​யீடு 55.3%-லிருந்து (2005-06) 11.28%-ஆக (2022-23) குறைந்​துள்​ளது.

இணையத்துக்கு கட்டுப்பாடு: குழந்தைகளின் டிஜிட்டல் பழக்கவழக்கங்களை வடிவமைப்பதிலும், அவர்கள் இணையதளங்களில் உள்ள தீய உள்ளடக்கங்களைக் காண்பதைத் தவிர்க்க எளிய சாதனங்கள் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிப்பதிலும் பள்ளிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: 2005 முதல் 2024ம் ஆண்டு வரையி​லான காலத்​தில், உலகளா​விய சரக்கு ஏற்றுமதியில் இந்​தி​யா​வின் பங்கு 1-லிருந்து 1.8 சதவீத​மாக அதிகரித்​துள்​ளது. அதே​நேரம், சேவை ஏற்​றும​தி​ 2-லிருந்து 4.3 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது. 2025 நிதி​யாண்​டில் நாட்​டின் ஏற்றுமதி 825.3 பில்​லியன் டாலரை எட்​டியது.

இது முந்​தைய ஆண்​டை ​விட 6.1% அதி​கம். சேவை துறை ஏற்றுமதி 13.6% வளர்ச்​சியை பெற்று 387.6 பில்​லியன் டாலரை எட்டி உள்​ளது. நடப்பு கணக்கு பற்​றாக்​குறை 2026 நிதி​யாண்​டின் காலாண்​டில் ஜிடிபி​யில் 1.3% ஆக இருந்​தது. இது மற்ற பெரிய பொருளா​தார நாடு​களு​டன் ஒப்​பிடும்​போது மித​மானது ஆகும்.

வெளி​நாடு​களில் வசிப்​பவர்​கள் தாய்​நாட்​டுக்கு அதிக பணம் அனுப்​பும் நாடாக இந்​தியா நீடிக்​கிறது. 2025 நிதி​யாண்​டில் இது 135.4 பில்​லியன் டாலரை எட்​டியது.

2026 ஜனவரி 16 நில​வரப்​படி, நாட்​டின் அந்​நியச் செலா​வணி கையிருப்பு 701.4 பில்​லியன் டால​ராக அதி​கரித்​துள்​ளது. இதன்​மூலம் 11 மாதங்​களுக்​கான இறக்​குமதி செலவை சமாளிக்க முடியும். உலகளா​விய முதலீட்​டுச் சூழல் மந்​த​மாக இருந்த போதிலும், 2025 ஏப்​ரல் முதல் நவம்​பர் வரையி​லான காலத்​தில் 64.7 பில்​லியன் டாலர் முதலீட்டை இந்​தியா ஈர்த்​துள்​ளது.

அமெரிக்கா​வுடன் ஒப்​பந்​தம்: கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்தியப் பொருட்​களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான நிர்​வாகம் 50% வர்த்தக வரி விதித்​துள்​ளது. இது ஏற்றுமதியை பாதித்துள்ளது. இதையடுத்து அமெரிக்கா​வுடன் தாராள வர்த்தக ஒப்​பந்​தம் செய்​வது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இது​வரை 6 சுற்​றுப் பேச்​சு​வார்த்​தை நடந்துள்​ளது. இந்​த ஆண்​டுக்​குள்​ ஒப்பந்தம் கையெழுத்தாகும்​ என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இது வெளி​நாட்​டு வர்த்​தக ரீதி​யான நிச்​சயமற்​ற தன்​மை​யைக்​ குறைக்​க உதவும்​.

SCROLL FOR NEXT