வணிகம்

இந்​தி​யா - ஐரோப்​பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பல துறைகளுக்கு பயனளிக்கும் என வல்லுநர்கள் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா- ஐரோப்​பிய யூனியன் இடையே ஏற்பட்​டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்​டிஏ) உள்​நாட்​டில் பல்​வேறு துறை​களுக்கு அதிக பலனளிக்​கும் என்று பொருளா​தார வல்​லுநர்​கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்​தி​யத் தொழில் கூட்​டமைப் பின் ஏற்​றும​திக்​கான தேசியக் குழுத் தலை​வரும், பேட்​டன் இன்​டர்​நேஷனல் நிறுவனத்​தின் மேலாண் இயக்​குநரு​மான சஞ்​சய் புதியா கூறுகை​யில்,” இந்​திய – ஐரோப்​பிய யூனியன் வர்த்தக ஒப்பந்​தம் சந்தை அணுகல், வர்த்​தகப் போட்​டியை வலுப்படுத்​து​வ​தில் ஒரு முக்​கிய மைல்​கல்​லாக இருக்​கும்.

          

இந்த ஒப்​பந்​தத்​தின் மூலம் இந்​தி​யா​வின் பல்​வேறு வர்த்தகப் பொருட்​களுக்கு முன்​னுரிமை அடிப்படையிலான சந்தை அணுகல் கிடைக்​கும். இது நமது உள்​நாட்டு நிறு​வனங்​களுக்​குப் புதிய வாய்ப்​பு​களை உரு​வாக்​கும்” என்​றார். டெலாய்ட் இந்​தியா நிறு​வனத்​தின் பார்ட்​னர் சவுரப் காஞ்​சன்

கூறுகை​யில், “இந்த ஒப்​பந்​தம் இந்​தி​யா​வின் முந்​தைய வர்த்தக ஒப்​பந்​தங்​களி​லிருந்து முற்​றி​லும் மாறு​பட்​டது. குறிப்​பாக, இறக்​குமதி செய்​யப்​படும் கார்​களுக்​கான வரியை இந்​தியா 110-லிருந்து 10 சதவீத​மாகப் படிப்​படியாகக் குறைக்க சம்​ம​தித்​துள்​ளது.

இந்​தி​யா​வின் கார் சந்தை ஆண்​டுக்கு 43 லட்​சம் யூனிட்களுக்​கும் அதி​க​மாக வளர்ந்து வரு​வ​தால், உள்நாட்டு உற்​பத்​தி​யாளர்​களால் இந்த வரிச் சலுகையைச் சமாளிக்க முடி​யும்” என்றார். டெலாய்ட் இந்தி​யா​வின் மற்​றொரு பார்ட்​ன​ரான நி​வாஸ் குச்​சி போட்லா கூறுகை​யில், “தற்​போது இருதரப்பு வர்த்​தகம் 136 பில்​லியன் டால​ராக உள்​ளது.

இந்த ஒப்​பந்​தம் அமலுக்கு வரும்போது, இரு தரப்பினருக்கும் மிகப்​பெரிய அளவி​லான வர்த்தக வாய்ப்பு​கள் அமை​யும். விவ​சாயப் பொருட்​கள் ஏற்றுமதியில் உள்ள வரி தடைகள் இதன் மூலம் நீங்​கும்” என்​றார். ஷர்​துல் அமர்​சந்த் மங்​கள்​தாஸ் நிறு​வனத்​தின் பார்ட்​னர் ருத்ர குமார் பாண்டே கூறுகை​யில், “தற்​போது சீனா, ஜப்​பான், தென் கொரியா போன்ற நாடு​களி​லிருந்து ஐரோப்​பிய நாடு​கள் வாகன உதிரி​பாகங்​களை இறக்குமதி செய்​கின்​றன. இந்த ஒப்​பந்​தத்​தின் மூலம் அந்த வாய்ப்​பு​கள் இனி இந்​தி​யாவை நோக்​கித் திரும்​பும்” என்று நம்​பிக்கை தெரி​வித்​தார்.

எப்​டிஏ ஒப்​பந்​தம், இந்​தி​யா​வின் வாகன உதிரி​பாகங்​கள் துறை​யில் நேரடி அந்​நிய முதலீடுகளை ஈர்ப்​ப​தன் மூலமும், சர்​வ​தேச விநி​யோகச் சங்​கி​லி​யில் இந்​தி​யாவை இணைப்​ப​தன் மூல​மும், நாட்​டின் ஆட்​டோமொபைல் துறை​யில் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று நிபுணர்கள் கருதுகின்​றனர்.

SCROLL FOR NEXT