வணிகம்

ரஷ்யாவிடம் இருந்து ரூ.10,000 கோடிக்கு 288 எஸ்-400 ஏவுகணை வாங்க மத்திய அரசு ஒப்புதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்​யா​விட​மிருந்து ரூ.10,000 கோடிக்கு 288 எஸ்​-400 ஏவு​கணை​கள் வாங்க பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தலை​மையி​லான ராணுவ தளவாட கொள்​முதல் கவுன்​சில் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

கடந்​தாண்டு மே மாதம் நடை​பெற்ற ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின்​போது ஆதம்​பூர் மற்​றும் புஜ் பகு​தி​களில் எஸ்​-400 வான் பாது​காப்பு ஏவு​கணை​கள் நிலை நிறுத்​தப்​பட்​டன. இதிலிருந்து பல இலக்​கு​களை தாக்​கும் ஏவு​கணை​கள் நீண்​டதூரம் சீறிப் பாய்ந்து பாகிஸ்​தான் போர் விமானங்​களை சுட்டு வீழ்த்​தின. இந்​திய எல்​லை​யில் இருந்து 314 கி.மீ தூரத்​தில் வந்த பாகிஸ்​தான் போர் விமானத்​தை​யும், எஸ்​-400 ஏவு​கணை துல்​லிய​மாக தாக்​கியது.

          

அப்போது எஸ்​-400 மற்​றும் பன்ட்​சிர் ஏவு​கணை​கள் இணைந்து இரட்டை அடுக்கு வான் பாது​காப்பை அளித்​தன. பாகிஸ்​தானிலிருந்து ஆயுதங்​களு​டன் வந்த ட்ரோன்​கள் மற்​றும் கமிக்​கேஸ் ட்ரோன்​களை எல்​லாம் ரஷ்ய ஏவு​கணை​கள் நடு​வானில் சுட்டு வீழ்த்​தின. இதனால் ரஷ்ய ஏவு​கணை​கள் அதி​கள​வில் தேவை என பாது​காப்பு படைகள் விருப்​பம் தெரி​வித்​தன.

இந்த தேவை​களை பாது​காப்பு தளவாட கொள்​முதல் கவுன்​சில் ஏற்​றுக்​கொண்டு ரூ.10,000 கோடி மதிப்​பில் 288 எஸ்​-400 ஏவு​கணை​களை வாங்க ஒப்​புதல் அளித்​துள்​ளது. இந்த கொள்​முதலை விரை​வாக முடிக்க நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

ரஷ்​யா​விடம் ஏற்​கெனவே ஒப்​பந்​தம் செய்​துள்​ளபடி மேலும் 2 எஸ்​-400 ஏவு​கணை​கள் யூனிட் இந்​தாண்டு ஜுன் மற்​றும் நவம்​பரில் விநி​யோகம் செய்​யப்​பட​வுள்​ளன. மொத்​தம் ரூ.3.60 லட்​சம் கோடி மதிப்​பில் ராணுவத் தளவாடங்​கள் வாங்க பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் நேற்று முன்​தினம் ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளார்.

தரைப்​படை பயன்​பாட்​டுக்​காக டேங்​கு​களை தகர்க்​கும் கண்​ணிவெடிகள் (வி​பாவ்), கவச வாக​னங்​கள், டி-72 டேங்​கு​கள் வாங்​க​வும் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளன. கடற்​படை பயன்​பாட்​டுக்​காக 4 மெகா வாட் கேஸ் டர்​பைன் - எலெக்ட்​ரிக் ஜெனரேட்​டர் மற்​றும் பி-81 கண்​காணிப்​பு வி​மானம்​ வாங்​க​வும்​ ஒப்​புதல்​ அளிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT