வணிகம்

‘கச்சா எண்ணெய் விலை 130 டாலராக அதிகரித்தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 0.8% வரை குறையும்’

எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் அறிக்கையில் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்த ஆண்​டில் கச்சா எண்​ணெ​யின் சராசரி விலை ஒரு பேரலுக்கு 130 டால​ராக உயர்ந்​தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 0.8% வரை குறை​யும் என எஸ் அண்ட் பி குளோபல் ரேட்​டிங்ஸ் தெரி​வித்​துள்​ளது.

எஸ் அண்ட் பி குளோபல் ரேட்​டிங்ஸ் நிறு​வனம் வெளியிட்ட ஒரு அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் வலு​வான மேக்ரோ பொருளா​தார மற்​றும் நிதித்​துறை அடிப்​படைகள், நீடித்த கச்சா எண்​ணெய் விலை அதிர்ச்​சி​யின் தாக்​கத்​தைத் தாங்​கும் வாய்ப்​புள்​ளது. இருப்பினும், 2026-ம் ஆண்​டில் கச்சா எண்​ணெ​யின் சராசரி விலை ஒரு பேரலுக்கு 130 டால​ராக உயர்ந்​தால் இந்​திய பொருளா​தார வளர்ச்சி 0.8% வரை குறையக்​கூடும்.

          

அதன் அழுத்த சூழ்​நிலை​யின் கீழ், வட்​டி, வரி, தேய்​மானம் மற்​றும் கடன் தள்​ளு​படிக்கு முன்​ன​தான கார்ப்​பரேட் வருவாய், 2027 நிதி​யாண்​டில் 15-25% குறையக்​கூடும். மேலும் கடன் விகிதம் 0.5 முதல் 1 மடங்கு வரை உயரக்கூடும். அதே​நேரம் வங்​கித் துறை​யின் சொத்து தரம் பலவீனமடைந்​து, வாராக்​கடன்​கள் சுமார் 3.5% வரை அதி​கரிக்​கக்​கூடும்.

மத்​திய கிழக்கு நாடு​களில் நில​வும் போரால் ஏற்​படும் அதிர்ச்​சிகளில் இருந்து இந்​தியா தப்​பிக்க முடி​யாது. எரிபொருள் விலை உயர்வு மற்​றும் விநி​யோகத் தடைகளின் வேதனை மாதக்​கணக்​கில் நீடிக்​கலாம். இது குடும்​பங்​கள், நிறு​வனங்​கள் மற்​றும் வங்​கி​களின் பொருளா​தார நடவடிக்​கைகளைக் குறைக்​கும்.

எனினும், நிறு​வனங்​களின் வலு​வான இருப்​புநிலைக் குறிப்​பு​கள், போது​மான மூலதனம் கொண்ட வங்​கி​கள் மற்றும் மீள்​திறன் கொண்ட வெளிப்​புற நிலை ஆகியவை பாதிப்​பு​களுக்கு எதி​ராக பாது​காப்பை வழங்​கு​கின்​றன.

எஸ் அண்ட் பி குளோபல் ரேட்​டிங்​ஸ், அழுத்த நிலை​யில் 2026-ல் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 130 டால​ராக​வும், 2027-ல் 100 டால​ராக​வும் இருக்​கும் என்று கருதுகிறது (சா​தாரண நிலை​யில் முறையே 85 மற்​றும் 70 டாலர்). இந்​தி​யா​வின் இறை​யாண்மை மதிப்​பீட்​டில் உடனடி தாக்​கம் எதை​யும் அது எதிர்​பார்க்​க​வில்​லை. இருப்பினும் நிதி ஒருங்கிணைப்பு முயற்​சிகள் தற்​காலிக பின்​னடைவைச் சந்​திக்​கக்​கூடும். இவ்​வாறு அதில்​ கூறப்பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT