வணிகம்

தங்கம், வெள்ளி விலை குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

அனலி

சென்னை: சென்னையில் இன்று (மே.15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்தது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்தது.

இந்​தியா தனது தங்க நுகர்​வில் கிட்​டத்​தட்ட முழு​வதை​யும் இறக்குமதி மூல​மாகவே பூர்த்தி செய்​கிறது. இந்​நிலை​யில் அந்நியச் செலா​வணிக் கையிருப்​பைப் பாது​காக்க உதவும் வகையில், ஓராண்​டுக்கு தங்​கம் வாங்​கு​வதை தவிர்க்​கு​மாறு மக்களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி கடந்த ஞாயிற்​றுக்​கிழமை அறிவுறுத்​தி​னார்.

இந்​நிலை​யில் தங்​கம், வெள்​ளி​யின் வெளி​நாட்டு கொள்​முதலைக் கட்​டுப்​படுத்​த​வும் நாட்​டின் அந்​நியச் செலா​வணி கையிருப்பு மீதான அழுத்​தத்​தைக் குறைக்​க​வும் எடுக்​கப்​படும் முயற்​சிகளின் ஒரு பகு​தி​யாக, மே12-ம் தேதியன்று தங்​கம் மற்​றும் வெள்ளி மீதான இறக்​குமதி வரியை மத்​திய அரசு 6-லிருந்து 15% ஆக உயர்த்தியது.

இதனைத் தொடர்ந்து மே13-ம் தேதி, தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 அதிரடியாக உயர்ந்தது. அன்றைய தினமே மாலையில் குறைந்தாலும், நேற்று (மே 14) மீண்டும் உயர்ந்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.ரூ.14,950-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.1,19,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.305-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT