தங்கம் விலை நிலவரம்
சென்னை: தங்கம் விலை மீண்டும் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தைக் கடந்தது. வெள்ளி விலையும் ஏற்றம் கண்டுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு கடந்த அக். 28-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.88,600 ஆக குறைந்தது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.1) கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.720 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.96,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.196-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் அதிகரித்து, ஒரு கிலோ ரூ.1,96,000-க்கு விற்பனையாகிறது.